Category Archives: தகவல்

கரும்பலகை

பதிவின் வடிவம்

ஆ எழுது ஆ எழுது என வாத்தியார் உங்களைப் பிடித்து கரும்பலகையில் எழுதவிட்டதுண்டா?

நாங்கள் படித்த காலத்தில் பாடசாலைகளில் கரும்பலகைகள்தான் உபயோகிக்கப்பட்டன.

எழுதுவதற்கும் கீறுவதற்குமான வெளியாக அதுவே வகுப்பறையில் ஆசிரியருக்கும் எங்களுக்கும் பயன்பட்டது. முன்நாட்களில் பாடசாலைகளில் கரும்பலகை உபயோகிக்கப்பட்டது.

எழுதுவதற்கும் கீறுவதற்குமான வெளியாக அதுவே வகுப்பறையில் ஆசிரியருக்குப் பயன்பட்டது.

SDC14096-001

பல தசாப்தங்களுக்கு முன்னர் அவை ஸ்லேட்டினால் செய்யப்பட்டன.

ஸ்லேட் பொதுவாக நிறம் கருப்பு இருந்ததால் கரும்பலகை என்ற பெயர் வந்தது.

பின்னர் பலகையில் செய்து கறுப்பு வரண்ம் பூசினர்.

சுண்ணக்கட்டியால் கரும்பலகைகளில் எழுதினார்கள்.

பருத்தி துணியிலான அழிப்பான்களால் (டஸ்டரால்) சுத்தம் செய்யப்பட்டன.

சுண்ணக்கட்டியின் தூசியால் ஒவ்வாமை ஏற்படுகிறது.

இப்போது கரும்பலகைக்குப் பதிலாக வெள்ளை போர்டு வந்துவிட்டது.

மார்க்கர்கள் கொண்டு எழுதுகின்றனர்.

0.0.0.0.0

கபரகொயா kabaragoya தமிழில் என்ன?

படம்

கபரகொயா எனப்படும் ஊரும் வகையான ஜந்து இலங்கையின் தென் பகுதிகளில் காணப்படுகிறது. பல்லி,ஓணான், உடும்பு போன்ற ஊரும் பிராணிகளில் ஒன்று.

நான் நோயாளர்களை பார்க்கும் Mediquick சென்று திரும்பும்போது Canal லின் எதிர்புறமாக St Peters College Grounds அணித்தாக இவர் ஊர்ந்து செல்வதைக் கண்டேன. விரைந்தோடி மறைந்துவிடுவார் என்ற பயத்தில் வாகனத்தில் இருந்து குதிதோடி எடுத்த படம் இது.

வெயில் எதிர்ப்புறமாக அடித்துக் கொண்டிருந்ததால் சிறப்பாக எடுக்க முடியவில்லை.

Asian water monitor என அழைக்கப்படும் இது இலங்கையில் மட்டுமே காணப்படுவதாகச் சொல்கிறார்கள். சிங்களத்தில் கபரகொயா எனும் இதை நீர் உடும்பு என்று தமிழில் சொல்லலாமா?

knob-nosed lizard அல்லது  hump-nosed lizard எனவும் அழைப்பதாகப் படித்தேன்.

சலமந்தரா என இணையத்தில் ஒருவர் எழுதியிருந்தார்.

இது நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் வாழும். புதிதாகப் பார்ப்பவர்கள் இதனை முதலை என எண்ணக் கூடும்.

பொதுவாக சாதுவான மிருகங்கள். ஆனால் கோபமூட்டப்படால் தங்கள் வாலால் அடிக்கவும், நகங்களால் கிழக்கவும், பல்லினால் கடித்துக் குதறவும் செய்யும்.

நீந்தக் கூடியவை. தமது வாலிலுள்ள துடுப்பு போன்ற பகுதியை பயன்படுத்தி நன்றாக நீந்தும். மீன், தவளை, எலி, பறவைகள். நண்டு, பாம்பு போன்றவற்றை உண்ணும்.

0.0.0.0.0.0