Monthly Archives: நவம்பர் 2011

மனிதனும் தேனீயும் முருங்கை மரமும்.

தரநிலை

முருங்கையிலையும் பூவும்

மறைந்திருந்து தலை நீட்டும் முருங்கைக் காய்

அதை மறைத்திட முயலும் பால்வண்ண மலர்கள்

மலருக்கு நோவின்றி நீவியெடுத்துத்

தேனினை அள்ளிச் சென்று

சேமித்தன தம் கூட்டில்

தம் பசி தீர்க்க அல்ல

தம் இராணிக்காக.

ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து

தேன் கூட்டினைச் சிதைத்து

கவர்ந்தெடுத்தான் மனிதன்

மனதில் வலி உறுத்தாது.

தனக்காக அல்லத்தான்.

விலை கூவி விற்க.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Advertisements

பூ பற்றிய பூக்கரங்கள்

தரநிலை

பூ பற்றிய பூங்கரங்கள்

கண்ணைக் கட்டும்
கார் இருளிலும்
பிளாசின் ஒளியில்
விழித்திடும் வண்ணங்கள்

பெருவீதி இடை நடுவில்

தரநிலை

பெருவீதி  இடை நடுவில்

பெருவீதிச் சிறுசெடி

பெரு வீதி இடை நடுவில்
சுடுவெயில் முடி கருக்க
வெளிர்பச்சை
வரம் வேண்டிக்
கலர் சமிக்கையருகே
காத்திருந்த வேளை..

மஞ்சள் பூ விரித்த
பசுமைச் செடி கண்டு
நாணிய ஞாயிறு
சிரம் தாழ்த்தும்.

இவ்வேளை
ஒலிபேசி தலை நீட்டி
கவர்தெடுத்தது…

எம்.கே.முருகானந்தன்.

வீதியோரம் வண்ண ஜாலம்

தரநிலை

கண்ணை விழித்து வைத்திருந்தால்

கண்ணைக் கவரும் வண்ண ஜாலங்கள்


காணக்கிடைக்கும் பாதையோரத்திலும்

எல்லாம் எம்மனத்தின் கீதங்கள்தான்.