Monthly Archives: மார்ச் 2012

தண்ணீரில் நடந்து வாரார் தண்ணிப் பூச்சியார்

பதிவின் வடிவம்

தண்ணீரில் நடந்து வாரார்
தத்தளிப்பு சற்றுமின்றி
முன்னங்கால் சற்றுக் கட்டை
பின்னு ரண்டும் வலு நீளம்
ஆறு கால்கள் ஆனாலும்
அரை இஞ்சி நீளம்தான்
அவருடல் முற்றாக.

கறுப்பு இவர் நிறமானாலும்
மண்ணிறத்து உறவுகளும் உண்டு
தண்ணீரில் தாளமிட்டு
தன்னிணைக்கு தூதுவிடுவார்.

நீர்ப் பரப்பில் விரைந்தோடி
தான் தப்பி
தனக்கிரை தேட
கூர்மையான கருவிழிகள்
வழி காட்டும்.
முன்கால்கள் இரண்டும்
இறுக்கமாக
அப்பிக் கொள்ளும்.

நுளம்பு போன்ற உருவானாலும்
மனித இரத்தம் குடிப்பதில்லை.
பூச்சி புளு உடல் துளைத்து
சாரத்தைத் பருகி
தன் வயிறு நிறைத்திடுவார்.
ஊசிபோன்ற
நீளமான தும்பிக்கை
ஸ்ரோவால் உறிஞ்சிடுவார்.

சலசலத்து ஓடாத தங்கு நீர்
இவருக்கு உகந்ததாகும்.
கேணியிலும் குடியிருப்பார்
கிணற்றிலும் குதூகலிப்பார்
வீட்டு வாளி நீரிலும் சமாளிப்பார்
வழி தவறி வந்திட்ட இவர்
என் வீட்டுச் சுவரில்
இளைப்பாறுகிறார்.

எம்.கே.முருகானந்தன்.

குரங்காட்டியும் குரங்கும்

பதிவின் வடிவம்

குரங்கும் குரங்கு மனமும்

குரங்கோடு இவன் அலைவான்
நகரடங்கக் குச்சொழுங்கை
தெருவெங்கும்
ஆங்காங்கே குரங்காட்டிப்
சிறுபிள்ளை கவர்ந்திழுக்க.
அப்பிளைப்ளில்
வழிதெருவில் சிறு காசேனும்
கைசேரல் பெரும்பாடாகும்.

நடையோங்கிக் குதி தேய்ந்து
புண்ணாகும் பாதம்
புழுதி தோய்ந்ததில்
குருதி மறைந்து கொள்ளும்.
ஒருபோதும் அரை வயிறும்
நிறையாத கிளிசறைப் பிழைப்பு
இருந்தாலும்
உயிர் பிழைக்க வேறு
வழியேதும் தெரியாது

இவனோடு நிதம் அலையும்
குரங்கிற்கும் கால் வயிறும் நிறையாது.
ஆனாலும்
காண்போரைக் கவர்ந்திழுக்கும்
அலங்காரத்தில்
குறைவேதும் இல்லை.

இருந்தாலும் சுயமாக
கெவர் பற்றி மரந்தாவி
கனிகவர்ந்து
விருப்போடு கொறிக்கும்
விடுதலைப்
பசியடங்கும்
காலம் கனிவதற்குள்
கதிமோட்சம்
கண்டிடுமோ?

எம்.கே.முருகானந்தன்

நகர் வாழ்வின் அலங்கோலம் இதில் வாழாது…

பதிவின் வடிவம்

நகர் வாழ்வின் அலங்கோலம்

இதில் வாழாது புரியாது

உடலெல்லாம் பெரும் புண்கள்

தொழுநோயாக பரந்தோங்க

பட்டாடைக் கலர் பூசும்

வெளிப்பூச்சு அலங்காரம்.

வெளியிருந்து பார்க்கையில்

அழகோ கொள்ளை

உள்நுழைந்தால் உயிர் வாழக்

காற்றேயில்லாத சிறைக் கூடம்.

தெரு வாழும் மரத்தின் சுதந்திரமும்

கிட்டாதாவென மனம் ஏங்கும்..

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0

மின்னொளி மண்கவ்விய வேளையதில்..

பதிவின் வடிவம்

மின்னொளி மண்கவ்விய வேளையதில்

என்னறையைக்  கவ்வியது

கண் மறையப் பேதலிக்கும் பேரிருள்

என்னவிது ஏதாயிற்றோவெனக்

உள்ளமதைக் குளறுபடியாக்கியது

இருட்டோ இன்னும் எதுவோவென

மருட்டி மனம் ஏங்கையில்

வெள்ளமென நுதல் வடிந்த வேர்வை

படிந்தது சட்டையெல்லாம்.

Power Failure

இன்னும் இருள் பொறுக்காதென

பத்த வைத்த மெழுகுவத்தியுடன்

அவசர விளக்கும் அணிசேர்க்க

இத்தனைநாள் புலனாகா அழுக்கெல்லாம்

என்னறையில் உறைந்திருத்தல் வெளிச்சமாயிற்று.

மூளியவள் மெழுகுச் சிரசாக என் மேசை

மாசு மறுவின்றி துலங்கும் காலம்

வருமொவென ஏக்கம் கொளலானேன்.

இருந்தாலும்….

என் உள்ளமதில் உறையும் கரு மாசெல்லாம்

தெள்ளனவே துலங்கிப் புலப்படவே

உள்ளொடுங்கி நாணலானேன்.

எம்.கே.முருகானந்தன்.