மின்னொளி மண்கவ்விய வேளையதில்..

Standard

மின்னொளி மண்கவ்விய வேளையதில்

என்னறையைக்  கவ்வியது

கண் மறையப் பேதலிக்கும் பேரிருள்

என்னவிது ஏதாயிற்றோவெனக்

உள்ளமதைக் குளறுபடியாக்கியது

இருட்டோ இன்னும் எதுவோவென

மருட்டி மனம் ஏங்கையில்

வெள்ளமென நுதல் வடிந்த வேர்வை

படிந்தது சட்டையெல்லாம்.

Power Failure

இன்னும் இருள் பொறுக்காதென

பத்த வைத்த மெழுகுவத்தியுடன்

அவசர விளக்கும் அணிசேர்க்க

இத்தனைநாள் புலனாகா அழுக்கெல்லாம்

என்னறையில் உறைந்திருத்தல் வெளிச்சமாயிற்று.

மூளியவள் மெழுகுச் சிரசாக என் மேசை

மாசு மறுவின்றி துலங்கும் காலம்

வருமொவென ஏக்கம் கொளலானேன்.

இருந்தாலும்….

என் உள்ளமதில் உறையும் கரு மாசெல்லாம்

தெள்ளனவே துலங்கிப் புலப்படவே

உள்ளொடுங்கி நாணலானேன்.

எம்.கே.முருகானந்தன்.

2 responses »

  1. ”…என் உள்ளமதில் உறையும் கரு மாசெல்லாம்

    தெள்ளனவே துலங்கிப் புலப்படவே

    உள்ளொடுங்கி நாணலானேன்……”
    நல்ல மரபுக் கவிதை!…எங்கு ஒளித்து வைத்திருந்தீர்கள் இவ்வளவு நாளாக.!….வாழ்த்துகள்.!
    வேதா. இலங்காதிலகம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s