தண்ணீரில் நடந்து வாரார் தண்ணிப் பூச்சியார்

பதிவின் வடிவம்

தண்ணீரில் நடந்து வாரார்
தத்தளிப்பு சற்றுமின்றி
முன்னங்கால் சற்றுக் கட்டை
பின்னு ரண்டும் வலு நீளம்
ஆறு கால்கள் ஆனாலும்
அரை இஞ்சி நீளம்தான்
அவருடல் முற்றாக.

கறுப்பு இவர் நிறமானாலும்
மண்ணிறத்து உறவுகளும் உண்டு
தண்ணீரில் தாளமிட்டு
தன்னிணைக்கு தூதுவிடுவார்.

நீர்ப் பரப்பில் விரைந்தோடி
தான் தப்பி
தனக்கிரை தேட
கூர்மையான கருவிழிகள்
வழி காட்டும்.
முன்கால்கள் இரண்டும்
இறுக்கமாக
அப்பிக் கொள்ளும்.

நுளம்பு போன்ற உருவானாலும்
மனித இரத்தம் குடிப்பதில்லை.
பூச்சி புளு உடல் துளைத்து
சாரத்தைத் பருகி
தன் வயிறு நிறைத்திடுவார்.
ஊசிபோன்ற
நீளமான தும்பிக்கை
ஸ்ரோவால் உறிஞ்சிடுவார்.

சலசலத்து ஓடாத தங்கு நீர்
இவருக்கு உகந்ததாகும்.
கேணியிலும் குடியிருப்பார்
கிணற்றிலும் குதூகலிப்பார்
வீட்டு வாளி நீரிலும் சமாளிப்பார்
வழி தவறி வந்திட்ட இவர்
என் வீட்டுச் சுவரில்
இளைப்பாறுகிறார்.

எம்.கே.முருகானந்தன்.

ஒரு மறுமொழி »

  1. இந்த தண்ணீர்ப் பூச்சியாரைத்தான் எங்கள் ஊரில் கணக்குப் பிள்ளை என்போம். ஏனெனில் இவரது முகத்தில் நீண்டு இருக்கும் மீசை போன்ற இரு கொம்புகளும் தளில் எழுதுவது போல எப்போதும் அசைந்க்ட படி இருக்கும், எனவே மக்கள் இவரை கணக்கு எழுதுவதாக கற்பனையில் கணக்குப் பிள்ளை என்பர். இந்தக் கணக்குப் பிள்ளையோடு நான் பள்ளிப் பருவத்தில் விளையாடிய நாட்களுக்கு கணக்கே இல்லை.

Dr.M.K.Muruganandan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி