இலைமீது படிந்திற்ற மாசகற்ற மழை நீரால் ….

பதிவின் வடிவம்

மாநாகரின் தெருநிறைத்து
வாகனங்கள்
பொழுதடங்க ஓடும்.
அது உண்டு கழித்திட்ட
கருவாயு குதம் பிரிந்து
வளி எங்கும் நோய் கொடுக்கப் பரவும்.

உயிர்வாழ
மாசுண்ணும் தாவரங்கள்
உயிர் வாய்வை
வளியெங்கும்
இரவெல்லாம் நிறைக்கும்.
அதைச் சுவாசிக்கும் உயிரினங்கள்
களிகொண்டு
பலவாகப் பெருகும்.

மிதந்தெழுந்த குளிர்காற்று
வெண்முகிலைத் தழுவ
சூல் கொண்டு கரு தாங்கி
மழைமேகம் ஆகும்.
அது பொழிந்த மழைநீரால்
பூவுலகு செழித்தோங்கி வாழும்.

தெருத்தூசி படிந்து அழுக்குறையும்
கொடி செடியின் மாசகற்ற
மழை நீரால் முடியும்.
அகமெங்கும் மாசுற்று
தூஷணையைப் பொழியும்
பாழ் மனம் தன்னைச்
சீர் செய்ய இங்கெவர்க்கு முடியும்?

மனதொடுக்கும் உளப் பயிற்சி
மனதூண்றிக் கைப்பிடித்தால்
உலகுள்ள உளமனைத்தும்
நிர்மலமாய் ஒளிரும்.

0.0.0.0.0.0.0

எம்.கே.முருகானந்தன்.

Advertisements

9 responses »

 1. ”..மனதொடுக்கும் உளப் பயிற்சி
  மனதூண்றிக் கைப்பிடித்தால்
  உலகுள்ள உளமனைத்தும்
  நிர்மலமாய் ஒளிரும்…”
  மிக அருமையான கவிதை – படம் இரண்டுமே- சிறப்பு!…சிறப்பு ..இரு தடவை வாசிக்கும் உணர்வு தந்தது. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

 2. ///தெருத்தூசி படிந்து அழுக்குறையும்
  கொடி செடியின் மாசகற்ற
  மழை நீரால் முடியும்.
  அகமெங்கும் மாசுற்று
  தூஷணையைப் பொழியும்
  பாழ் மனம் தன்னைச்
  சீர் செய்ய இங்கெவர்க்கு முடியும்?///

  அருமையான வரிகள்…………..நல்ல பகிர்வுக்கு நன்றி..

 3. இயற்கை வட்டத்தை
  இனிமையுடன் நயந்து…
  சுற்றுச் சூழலதன்
  தூய்மையுடன் சேர்ந்து…
  மனதிற்கும் சிகிச்சையினை
  விருப்புடனே தந்த,
  அழகான கவிதை!
  அற்புதமாம் வரிகள்!

 4. “உயிர்வாழ
  மாசுண்ணும் தாவரங்கள்
  உயிர் வாய்வை
  வளியெங்கும்
  இரவெல்லாம் நிறைக்கும்.”

  அழகிய வரிகளில்,
  அறிவியலும் அடங்கியுள்ளது.
  ஒவ்வொரு வரிகள் அருமை…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s