சுப்பர் மடச் சுடுகாடு

பதிவின் வடிவம்

எங்கப்பரின் அப்பர் அவரின் அப்பரென
அடியடியாக
இச் சுப்பர் மடச் சுடுகாட்டில்
தணலடங்கச் சாம்பராயினர்

முருகைக்கல்
அணை காக்கும்
பாக்குத் தொடுவாய்
கரை நீரில் சங்கமாகி
இந்துமாக் கடலேகி
உலகளந்தனர்.

செகண்ட் ஷோ முடிந்தவேளை
ஜாலியாகச் சத்தமிட்டு
ஜோலியான பகடிகளும்
கழுதை நாணும் பாடல்களுடன்
டபிளோடி வரும்வேளை
எரிதணலில் எழுந்திருப்பார்
சிதையெரியும் பிணம்
கெலி கெளவி சிறுநீர் சிந்த
விரைந்தோடியது
ஒருகாலம்.

சண்டையில் சவுக்களுடன்
சனங்களும் காணாமல் போயினர்
எரித்தலுக்கு சுடுகாடு
செல்லத் தடையாயிற்று.
நெடுதுயர்ந்த சவுக்கமரங்கள்
நிழல் கொடுத்த காலம்
கனவாயிற்று.

பின்னொருகால் மீண்ட வேளை
மீந்திருந்தது உடைந்த சுவர்களும்
இடிந்த மண்டபங்களும்
எம் கனவுகள் போல்
சிதைந்தே கிடந்தன .

ஊர் பிரிந்து உறவிழந்து
பிறதேசம் புகலானோர்
மீண்டொருகால் தம்தேசம் வருவாரோ
சிதையெரிய சுப்பர் மட
சுடுகாட்டில் அவர்க்கு
இடமுண்டோ?

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Advertisements

4 responses »

 1. ஊர்பிரிந்து உரவிழந்து பிறதேசம் புகல்வோர்க்கு
  அவர்தேச சுப்பர்மடத்திற்கே அவகாசம் கேட்டு காத்திருந்து
  நேரம் கேட்டு விஸாவாங்கி நேரத்துடன் போகவேண்டாமோ
  கவிதை மனதை நெகிழ வைக்கிறது.. என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேன்..
  இதெல்லாம் யோசனை செய்ய வயது வரம்பு வர வேண்டும்..

  • உண்மைதான். chollukireen இவையெல்லாம் நடக்க முடிகிற காரியங்களா. ஏதோ அந்தேநரத்தில் தோன்றியதைக் கீபோட்டால் கிறுக்கியிருந்தேன்.

 2. “செகண்ட் ஷோ முடிந்தவேளை
  ஜாலியாகச் சத்தமிட்டு
  ஜோலியான பகடிகளும்
  கழுதை நாணும் பாடல்களுடன்
  டபிளோடி வரும்வேளை
  எரிதணலில் எழுந்திருப்பார்”

  என் கல்லுரி வாழ்வை அசைபோட வைத்தன இந்த இனிய வரிகள்.
  அழகிய ஆக்கம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s