காகக்திற்கு அன்னம் வைத்தல்

தரநிலை

காகத்திற்கு வைத்தல்

காகக்திற்கு அன்னம் வைத்தல்
காலாகாலமாக நம் வழக்கம்
சின்னதாக வாழையிலையில்
செஞ்சோறு கறியுடன், வடை மோர் மிளகாய்ப் பொரியல்
பப்படம் பாயாசம் தயிர் என அழகாய்ப் படைத்து
கா காக் கீச்சுக் குரலில்
காகம் போலக் கரைகுரலெடுத்து
ஊரெங்கும் கேட்க உயர்த்தி வாசிக்க
காகங்கள் கூட்டமாக விருந்துண்ட
காலமெல்லாம்
மறந்துபோன கதைகளில்தான்.

இன்றோ ?
மாடிவீட்டில் மசுங்கி மசுங்கி
கீழ் வீட்டார் தலையில்
அபிசேகமாகுமா பதைபதைப்புடன்
லன்ஞ் பேப்பரில் சுட்டி வைத்ததை
சாப்பிட வருவாராவென
அவதியோடு பார்த்திருந்தும்
காகங்கள் பிசியோ பிசி
காணவில்லை அருகெங்கும்.

காகங்கள் காணாதொழிந்ததில்
கொண்டாட்டம் எறுப்புகளுக்காம்
பெரும் கூட்டாக வந்து விருந்துண்டபோதும்
மிஞ்சிக் கிடக்கிறதாம் உணவின்னும்
அருமந்த மனைவியார்
நசுக்கிடாது நக்கலடிக்கிறார்.

எம்.கே.முருகானந்தன்.

Advertisements

12 responses »

  1. எனது அம்மா இப்படி செய்வதை நான் பார்த்து இருக்கிறேன் காகத்துக்கு அன்னமிடுதலின் தத்துவங்கள் எனக்கு தெரியாது நம்பிக்கையும் இல்லை.. ஆனால் இதில் இருந்து நாங்கள் கற்கவேண்டிய ஒரே விடயம் ஒரு காகம் படையலை கண்டு விட்டால் போதும் எல்லா காகத்தையும் அழைத்து சேர்ந்து உண்ணும்…

  2. ஊரிலே இன்னமும் காகங்கள் இருக்கின்றன.கூப்பிட்ட குரலுக்குப் பிகு காட்டிக்கொண்டு வந்து சாப்பிடுகின்றன.நின்று ரசிக்கத்தான் நமக்கு நேரமில்லை.
    கவிதை அருமை.

    • ஆம் தாட்சாயணி
      ஊர் வாழ்க்கையில் உயிர்ப்பு இருக்கிறது.
      நகர் வாழ்வில் இயல்பையும் இயற்கையையும்
      தொலைத்து அழுந்துகிறோம்.

  3. “காகங்கள் காணாதொழிந்ததில்
    கொண்டாட்டம் எறுப்புகளுக்காம்
    பெரும் கூட்டாக வந்து விருந்துண்டபோதும்
    மிஞ்சிக் கிடக்கிறதாம் உணவின்னும்
    அருமந்த மனைவியார்
    நசுக்கிடாது நக்கலடிக்கிறார்.”

    அழகாய் சொன்னீர்கள் அய்யா…
    மிக அழகு.

  4. “காகங்கள் பிசியோ பிசி
    காணவில்லை அருகெங்கும்”_இருந்தால்தானே வருவதற்கு!

    ‘காகக்திற்கு அன்னம் வைத்தல்’_கவிதையின் தலைப்பப் பார்த்ததுமே சிறு வயதில் அப்பாவுடன் சேர்ந்து போட்டி போட்டு (தம்பியுடன்) கத்தி அழைத்த ஞாபகம் வருகிறது.கவிதை நன்றாக உள்ளது.

  5. தமிழ் நாட்டு காகங்கள் அதநதன் நேரத்திற்கு வந்து நாம் வைக்காவிட்டால் கூட கூவி அழைக்கின்றன.

  6. நல்ல கவிதை. பகிர்விற்கு நன்றி.
    காலையில் காக்கைக்கு உணவிட மறந்து விட்டால் வாசலில் வந்து அழைத்து ஞாபகமூட்டும் நண்பர்கள் எங்கள் பகுதி காக்கைகள்.
    பிசியாக இல்லை தமிழகத்து காக்கைகள் பசியாக இருக்கின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s