உயிருறை உரத்தில் இயல்பான ஜனனம்

பதிவின் வடிவம்

இயற்கை உரத்தில் பிறப்பு

தன்னிறைவும்
போஷனைச் செறிவும்
சூழலின் இசைவுறும்
இரசாயனக் கலப்பிலா
சேதன உரமும்
தன்னகத்தே கொண்டது
இயற்கை.

தண்டும் இலையும்
அழகுற இதழ் விரிக்கும் மலரும்
மண்ணில் ஒடங்கி மறைந்திருந்தும்
உணவிட மறக்கா வேர்களும்
அதன் வாரிசுகள்.

பூக்கள் இல்லையென
தாவரத்தைத் தூற்றல் தகுமா?
நீரினை வளியை
மண்ணை
ஏன் ?
அதற்கிடும் உரத்தையும்
மாசாக்கிடும் மனிதனே
இயற்கை அழிந்தால்
இயற்கையின் நிழலான
உனக்கெங்கே
வாழ்வு ?

எம்.கே.முருகானந்தன்.

Advertisements

4 responses »

 1. ”..உரத்தையும்
  மாசாக்கிடும் மனிதனே
  இயற்கை அழிந்தால்
  இயற்கையின் நிழலான
  உனக்கெங்கே
  வாழ்வு ?…”

  இது தானே யதார்த்தம் இதை மறக்கிறோம் எமது சுயநலத்தால்.. நல்ல வரிகளும், படமும்.
  மகிழ்ச்சி ஐயா.
  வளரட்டும் உங்கள பணி.
  வேதா. இலங்காதிலகம்.

  • நன்றி கோவைக் கவி.
   உங்கள் சிட்டுக் குருவி கவிதை பார்த்தேன்.
   இயற்கையை ஓம்பும் உங்கள் தணியாத
   தாகம் அதில் அருமையாக வெளிப்பட்டது.
   வாழ்த்துக்கள்

 2. “சூழலின் இசைவுறும்
  இரசாயனக் கலப்பிலா
  சேதன உரமும்
  தன்னகத்தே கொண்டது
  இயற்கை.”

  “பூக்கள் இல்லையென
  தாவரத்தைத் தூற்றல் தகுமா?”

  அழகாய் சொன்னீர்கள்…
  அழமான கருத்து…

 3. நன்றி பழனிவேல்
  ‘சிட்டுக் குருவி’, ‘கோபம்’
  என இயற்கையைப் போற்றும்
  அருமையான கவிதைகளின்
  கூடவே சூழலைப் போற்றும்
  எனது கவிதையும் வெளியானதில்
  ஆனந்தம் அடைகிறென்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s