Monthly Archives: ஜூலை 2012

மறைந்த அப்பாக்களின் நாள்

தரநிலை

நிலவு ஓழிந்து
வானம் கறுத்த நாள்
அப்பிக் கிடக்கும்
காரிருள்
சோகத்தைச் சுமந்து
மங்கிக் கிடக்கும்
மனசாக.


ஓடோடி உழைத்தது
நாரி வளைய
குடும்பத்தை நிமிர்த்தி
கற்க வைத்து
சான்றோர் முன் நிமிர
ஆளாக்கிய
தந்தையர் நாள்.

மின்னிடும் விண்மீன்களாக
கரு வானில்
உலா வரும்
இன்னமும்
பல அப்பாக்கள்
காத்திருக்கிறார்கள்
அமாவாசை நாளில்
கசக்கும் காய் படைத்துத்
தாங்களும்
துதிக்கப்படுவதற்கான
நாட்களை எண்ணியபடி.


காத்திருக்கின்றன
கடமைகள்
பிள்ளைகளுக்கு
விரதம் இருந்து
துதிப்பதைவிட
வாழும் போதே
துயருராமல்
காப்பதற்கு.

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Advertisements