காக்கைள் கரைதல் வெற்றுப் பேச்சல்ல….

Image

ஒரு திரை சீலை விரிகிறது
மைதானத்தில் அரங்கு திறக்கிறது
வானத்தில் வட்டமிடல் தவிர்தது
தரையில் கூடினர்

காக்கைளில் நாடாளுமன்றம்

ஒரு பருந்து விரட்டி யடித்தால்
ஒளிந்து மறைவதற்காய் கூடியதல்ல.
கா கா கா
சூரியனின் வெம்மை துரத்தவும் இல்லை
மரங்களில் நிழலணைய
கிளைகளின் சீதளத்தில்
துயிலுறவும் அல்ல.
கா கா கா
இது கவலையின் விம்மலல்ல
ஏக்கத்தின் கரைதலுமல்ல
விரக்தியின் வெம்பலுமல்ல
கா கா கா

கா கா கா
தேவையின் கூடல்
தம்மில் கூடி கரைந்து பேசி
கிடைத்த உணவைப் பகிர்ந்து
மகிழ்ந்து உண்டு
மனிதனுக்கு செய்தி சொல்வதற்கான கூடல்

‘ஏ மனிதர்களே பிரிந்து நின்று
சுடு சொல் வீசாதீர்
நிந்தனை செய்யாதீர்,
குடுமி பிடித்துக் கொல்லாதீர்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’

மனிதப் பருந்துகளும்
வல்லூறுகளும்
இனத்தின் பேரால்
மதத்தைச் சொல்லி
சாதியைக் காட்டி
சகமனிதனையே
தின்று ஜீரணித்து
ஏப்பமிடக் காத்திருக்கின்றன.

காக்கைள் கரைதல்
வெற்றுப் பேச்சல்ல
கவனத்தில் கொள்ளுங்கள்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

3 responses »

  1. ”…காக்கைள் கரைதல்
    வெற்றுப் பேச்சல்ல
    கவனத்தில் கொள்ளுங்கள்…”
    உண்மை ஒற்றுமையின் உதாரணம்.
    அருமைக்கரு. நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

  2. தம்மில் கூடி கரைந்து பேசி
    கிடைத்த உணவைப் பகிர்ந்து
    மகிழ்ந்து உண்டு
    மனிதனுக்கு செய்தி சொல்வதற்கான கூடல்

    என்றுமே இயற்கையிடமிருந்தும்,மற்ற உயிரிகளில் இருந்தும் உயர்திணை என்று தன்னைத்தானே
    வர்ணிக்கும் மனிதன் கற்றுக்கொள்ள நிறையுண்டு என்பதனை எளிமையாக,பலமாக எடுத்தாழ்கிறது கவிதை.
    ஒரு இளையவனாக கருத்திடல் ஒன்றுக்கு சந்தர்ப்பம் அளித்தமைக்கு நன்றிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s