”காதறுந்த ஊசியும் வாராது காண்
கடைவழிக்கே’ என்றனர்
அன்று.
கூருடைய ஊசி
சுடுகாட்டிற்கு வழிகாட்டும்
என்பர்
ஏற்பும் சீழும் உயிர் பறிக்கலாம்
என்பதால் இன்று.
திருவெண்காடர் துறவறம்
பூண்டு பட்டினத்தார் ஆனதும்
ஊசியால்தான்..
தைத்துக் கொண்டிருந்த
தையலாள் விரலில்
தையல் ஊசி ஏறியதால்
தடமடித்தோடி
மருத்துவரை நாடியதும்
இன்றொரு நாள்.
கையில் ஊசி ஏறியது
போதாதென
மருத்துவரும் தன் பங்கிற்கு
ஏறிய ஊசியைப் பிடுங்கியெடுத்து
ஏற்றினார் மற்றொரு ஊசியை
புஜத்தினில்
ஏற்பு மருந்தெனப் பெயரிட்டு
பணமும் பறித்திட்டார்.
”காதறுந்த ஊசியும் வாராது கடைவழிக்கே’
கூருடைய ஊசி கடைவழிக்கும்
வழிகாட்டும் என்றுணர்வீர்.
எம்.கே.முருகானந்தன்.
Dr.M.K.Muruganandan ஐயா,
காதறுந்த ஊசி(கடைசியில் இதுகூட வரப்போவதில்லை),கூருடைய ஊசி (நிலையான ஊருக்கு வழிகாட்டுகிறது) இரண்டினையும் பற்றிய கவிதையை வழக்கம்போல் நகைச்சுவையுடன் கூறியது அருமை.நன்றி.
கருத்துரைக்கு நன்றி chitrasundar5