Monthly Archives: ஒக்ரோபர் 2012

வெள்ளை அந்தூரியமும் மட்டச் சிந்னைகளும்…

பதிவின் வடிவம்

கட்டற்ற கனவுகள் காணாதீர்கள்

மட்டச் சிந்னையில் மூழ்காதீர்

கெட்ட நினைவுகளில் சிந்தாதீர்கள்

புத்தி கெட்டவனெனத்

திட்டாதீர்.

flamingo flower என்றும்

boy flower எனவும்

சூட்சுமாய் பெயரிட்டார்

ஆங்கிலத்தில்.

இருதயம்போல் பாளை (spathe)

இதமான வெண்நிறத்தில்.

இளம் சிகப்பில்  நிமிர்தெழும்

மடல் மஞ்சரியும் (spadix)

இதன் அழகு

பனந் தடுக்காய் பரந்திடும்

பச்சை இலை

அடிமடியில் விரிந்திருக்கும்

வெள்ளை அந்தூரியம்

பூஞ்செடியாம்.

வெட்டவெளியில் மட்டுமின்றி

நிழல் பரவும் வளவுகளிலும்

உள்வீட்டின் தரைகளிலும்

சட்டிகளிலும் சிரமின்றி

செழித்தோங்கும் செடி.

கடும் வெயில் கூடாது

சுட்டுப் பொசிங்கிவிடும்

சுருங்கிக் கருகிடுவார்

ஜன்னலருகு ஒளிபோதும்

இவர் மலர்ந்து வாழ.

மண்ணடி வரண்டிடாமல்

சீதளமாய்  பேணிட

அடிக்கடி நீரூற்றுங்கள்

தேங்கி நின்றால் அழுகிவிடும்

வேரடியில் மட்டையிட்டால் (தேங்காய்)

நீர் வழிந்தோடும்

ஈரலிப்பு நலமாகும்.

எம்.கே.முருகானந்தன்

பொம்புளை சிரிச்சாப் போச்சு ..கீரை முதிர்ந்தால் …

பதிவின் வடிவம்

புகையிலை விரிச்சாப் போச்சு
பொம்புளை சிரிச்சாப் போச்சு
இது பெண்களை இழிவு செய்யும் பேச்சு


கீரை முதிர்ந்தால் போச்சு
பூத்துக் காய்த்தால் போச்சடா போச்சு
இது நுனிநாக்கில் சுவைப்பவர் கூற்று

மரணத்தின் பின் வாழ்வு

பதிவின் வடிவம்

மரணத்தின் பின் வாழ்வு

இறந்தும் இறப்புக்கு அப்பாலும் வாழும் வாழ்விது

வேதம் ஓதி, வெண் நூல் பூண்டு
நாதன் நாமம் செப்பி
காலனை விரட்டிய வாழ்வல்ல இது
இறந்தும் இறப்புக்கு
அப்பாலும் வாழும் வாழ்விது
மண்ணடி வேரின்
தலைநிமிர்த்தி உலகளத்தல்

0.0.0.0.0.0

காத்திருப்பு இலைமீதும் இவருக்காகவும்

பதிவின் வடிவம்

காத்திருந்தேன் தெருவோரம்
வருமா வாகனமென?
வரவில்லை.
வந்தார் ஒருவர்
மெதுவென அமர்ந்தார்.
அமைதியின்றி அலைந்தார்
அங்கும் இங்கும்

ஆயினும்
கரமிருந்த பை திறந்து
கமராவைக் கைப்பிடித்து
கிளிக்கும் வரை
பறந்தோடவில்லை.
காத்திருந்தார்
அருகிருந்த தளிரிலையில்
இரை வருமாவென
ஏக்கத்துடன்.
கமராவிற்குள்
சிறையானார்
பாக்கியவானானேன்.
எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0

மடியில் வந்திருந்தாள் வேட்கை தீராதவள் ….

பதிவின் வடிவம்

மடியில் வந்தமர்ந்தாள்
வேட்கை தீராதவள்.
அங்கலைந்து இங்கலைந்து
சிமிட்டிச் சிறு விழிகளால்
நோட்டமிட்டு
நாசியால் மோப்பமிட்டு
ஓ குரூப்பான்
எனக்கேற்றவன் இவனேயென
ஈற்றில் முடிவெடுத்து
தாகமடக்க
தொடைமீது வந்தமர்ந்தாள்.

தவித்தேன் நான்

மோகத்தில் தவித்தவளை
ஆலிங்கனம் செய்யவும்
முத்தத்தில் மூழ்கிடவும்
கூடிக் களித்திடவும்
முடியாது தவித்தேன்.

டெங்கு வந்திடுமோ
மலேரியாவால மரிப்பனோ
யானைக் காலால்
வாழ்வு கனத்திடுமோ
மஞ்சள் காய்ச்சல் பற்றிடுமோ
ஜப்பானிய மூளைக்
காய்ச்சல் கொன்றிடுமோ?

சிந்தனைகள் தொடர்ந்தெழ
கிலேசம் மீதுறவே
அணைக்க வெழுந்த கையால்
அடித்துக் கொன்றிட்டேன்
மோகித்து வந்த நுளம்பாளை.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.00