மடியில் வந்திருந்தாள் வேட்கை தீராதவள் ….

பதிவின் வடிவம்

மடியில் வந்தமர்ந்தாள்
வேட்கை தீராதவள்.
அங்கலைந்து இங்கலைந்து
சிமிட்டிச் சிறு விழிகளால்
நோட்டமிட்டு
நாசியால் மோப்பமிட்டு
ஓ குரூப்பான்
எனக்கேற்றவன் இவனேயென
ஈற்றில் முடிவெடுத்து
தாகமடக்க
தொடைமீது வந்தமர்ந்தாள்.

தவித்தேன் நான்

மோகத்தில் தவித்தவளை
ஆலிங்கனம் செய்யவும்
முத்தத்தில் மூழ்கிடவும்
கூடிக் களித்திடவும்
முடியாது தவித்தேன்.

டெங்கு வந்திடுமோ
மலேரியாவால மரிப்பனோ
யானைக் காலால்
வாழ்வு கனத்திடுமோ
மஞ்சள் காய்ச்சல் பற்றிடுமோ
ஜப்பானிய மூளைக்
காய்ச்சல் கொன்றிடுமோ?

சிந்தனைகள் தொடர்ந்தெழ
கிலேசம் மீதுறவே
அணைக்க வெழுந்த கையால்
அடித்துக் கொன்றிட்டேன்
மோகித்து வந்த நுளம்பாளை.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.00

ஒரு மறுமொழி »

  1. “மடியில் வந்தமர்ந்தாள்
    வேட்கை தீராதவள்.
    அங்கலைந்து இங்கலைந்து
    சிமிட்டிச் சிறு விழிகளால்
    நோட்டமிட்டு
    நாசியால் மோப்பமிட்டு”

    என்னா ஒரு வர்ணனை!
    நல்ல கவி வளம்.
    மிகவும் ரசித்தேன்…

  2. Dr.M.K.Muruganandan,

    கவிதை சிட்டுக்குருவியைப் பற்றியதோ என படித்துக்கொண்டே வருகையில், “ஓ குரூப்பான் எனக்கேற்றவன் இவனேயென”_இவ்விடத்தில் கண்டுபிடித்துவிட்டேன் அது anopheles என.

    நல்ல மருத்துவருக்குள் இப்படியொரு நகைச்சுவைக் கவிஞரா! என ஆச்சரியம்.எங்க ஊரில் எல்லாம் பெரும்பாலான (முழுவதுமே) மருத்துவர்களை சிடுசிடுவென்றே பார்த்து பழகிய எனக்கு இது புதிதுதான்.கவிதையை மீண்டும்மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்.நன்றி ஐயா.

  3. மிஸ் நுளம்பாள் (சரித்திர காலத்துப் பெயர்போல் இருக்கிறது) அடிக்கடி உங்கள் மடியில் வந்து அமர்கிறவளாக இருக்கவேண்டும். அதனால்தான் உங்கள் இரத்த குறூப் எதுவென்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

    அது ஒருபுறமிருக்க, நுளம்புக் கடியால் இத்தனை வியாதிகள் வந்திடுமோ? டாக்டராகிய நீங்களே இவ்வளவுக்கு அஞ்சும்போது நாமெப்படி வாளாதிருக்க முடியும்?

    இறுதியில்…

    “இந்த வயதில் வேறு எவள் வந்து மடியிலிருப்பாள்.”

    டாக்டரின் பதிலும் கவிதையின் ஒரு வரியாயிற்று. ஆண்களுக்கு வயது போய்விட்டால் தேவாரப் புத்தகத்தைத் தூக்கிவைத்திருக்க வேண்டியதுதான் என உங்கள் இளவயது நண்பர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நல்ல சூடு கொடுக்கவேண்டும், டாக்டர். “அந்த விஷயத்துக்கு” Age Limit கிடையாது எனச் சொல்லுங்கள், டாக்டர்.

Dr.M.K.Muruganandan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி