வெள்ளை அந்தூரியமும் மட்டச் சிந்னைகளும்…

பதிவின் வடிவம்

கட்டற்ற கனவுகள் காணாதீர்கள்

மட்டச் சிந்னையில் மூழ்காதீர்

கெட்ட நினைவுகளில் சிந்தாதீர்கள்

புத்தி கெட்டவனெனத்

திட்டாதீர்.

flamingo flower என்றும்

boy flower எனவும்

சூட்சுமாய் பெயரிட்டார்

ஆங்கிலத்தில்.

இருதயம்போல் பாளை (spathe)

இதமான வெண்நிறத்தில்.

இளம் சிகப்பில்  நிமிர்தெழும்

மடல் மஞ்சரியும் (spadix)

இதன் அழகு

பனந் தடுக்காய் பரந்திடும்

பச்சை இலை

அடிமடியில் விரிந்திருக்கும்

வெள்ளை அந்தூரியம்

பூஞ்செடியாம்.

வெட்டவெளியில் மட்டுமின்றி

நிழல் பரவும் வளவுகளிலும்

உள்வீட்டின் தரைகளிலும்

சட்டிகளிலும் சிரமின்றி

செழித்தோங்கும் செடி.

கடும் வெயில் கூடாது

சுட்டுப் பொசிங்கிவிடும்

சுருங்கிக் கருகிடுவார்

ஜன்னலருகு ஒளிபோதும்

இவர் மலர்ந்து வாழ.

மண்ணடி வரண்டிடாமல்

சீதளமாய்  பேணிட

அடிக்கடி நீரூற்றுங்கள்

தேங்கி நின்றால் அழுகிவிடும்

வேரடியில் மட்டையிட்டால் (தேங்காய்)

நீர் வழிந்தோடும்

ஈரலிப்பு நலமாகும்.

எம்.கே.முருகானந்தன்

ஒரு மறுமொழி »

  1. ஆங்கிலப் பெயர் அறிந்தது. மகிழ்ச்சி.
    சிந்தனை, ஒப்பீடு மிக்க நன்று.
    There in Horna எஸ்டேட்டில் ஐந்தூரியம் நடுவில் வாழ்தது நினைவு வந்தது.
    வேதா. இலங்காதிலகம்.

திண்டுக்கல் தனபாலன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி