Monthly Archives: ஜனவரி 2013

தைப்பொங்கல் பட்டம்

தரநிலை

அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

பட்டம் ஏற்றுபவர்களுக்கு
தைப்பொங்கலுக்காகக் காத்திருப்பார்கள்.
அக் காலம் விசேடமானது.
வாடைக்காற்று வீச
வானில் மேலெழுந்து
பாயும் பட்டங்கள்
பட்டாம் பூச்சிகளாகமின்னிடும்
அழகு வார்த்தைகளில் அடங்காது.
குழந்தைகளாக பட்டம் ஏற்றிய நினைவுகள்
பட்டங்கள் மேலெழுந்து
பறப்பது போலக் கிளர்ந்த எழும்.

கவிஞர் யாழ்ப்பாணனனது கவிதை ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

SDC12893-001

பட்டம் ஒன்று பறக்குது பார்
பனையின் உயர நிற்குது பார்
வெட்டவெளியில் விந்தையுடன்
விளையாட்டுக்கள் புரியுது பார்

DSC02891-001
குத்துக் கறணஞ் சிலபோடும்
குதித்துக் கிளம்பி வானேறும்
பத்து முழுத்துப் பாம்பெனவே
பாங்குடன் நின்றும் அசைந்தோடும்.

SDC14084-002
தம்பி வந்து பட்டம் பார்
தாவிக் குதிக்கும் அதுவோ பார்
நம்பி உனது கைதனிலே
நானுங் கயிற்றைத் தரமாட்டேன்.

SDC12909-001
ஐயோ எனது பட்டமெங்கே
அறுத்துக் கொண்டே ஓடுதடா
கையோடிங்கு சில முழத்துக்
கயிறுதானே காணுதடா.

DSC02892-001

இது கவிஞர் யாழ்ப்பாணனனது கவிதை.

எனது பிறந்த ஊரான வியாபாரிமூலைச் சேர்ந்த திரு.வே.சிவக்கொழுந்து என்ற பெயருடைய அவரது கவிதை நூலான ‘மாவைக்கு மாலை” யிலிருந்து எடுக்கப்பட்டது.

நூல் வெளியானது ஆகஸ்ட 1948 ல் ஆகும்.

SDC14209-002

0.0.0.0.0.0.00

Advertisements

திருடாதே என் குழந்தைக்கானதைத் திருடாதே…

தரநிலை

திருடாதே
பாலைத் திருடாதே
என் குழந்தைக்கானதைத்
திருடாதே
திருடிப் பெற்றதை
உன் குழந்தைக்கு ஊட்டாதே

SDC14063-002

பாசாங்கு பண்ணாதே
சுரக்காது என பொய்யாதே
நொறுக்குகளை மெல்லாது
தின்பது போசணையானால்
சுரக்கும் பால் நிறைவாக.

உன்னழகு கெடுமென்ற
மடைமைச் சிந்தனையின்றி
என் வாரிசிற்கு என் பாலென
உணர்வு சொரிய ஊட்டினால்
மேலும் சொரியும் பால்.

மனம் வேண்டும்.
மனமிருந்தால்
மிஞ்ச மிஞ்சச் சுரக்கும்
இது மருத்துவம் கண்ட உண்மை.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Bye Bye 2012, வளமுடன் வருக 2013

தரநிலை

Bye Bye 2012
வருத்தமொன்றில்லை
விடைபெற்று நீ செல்வதால்
கழுத்தறுத்தாய்
எனக் கடுப்புமில்லை.
பீடமேற்றினாய்
எனப் பெருமையுமில்லை.

DSC02713-001
அமைதியைக் கொடுத்தாய் என்றாலும்
எட்ட வேண்டிய இலக்குகளை
எட்டாத தொலைவிற்கு
அப்புறப்படுத்த முனைபவர்
தொல்லைகள் பல.

DSC02783-001

புதிய நம்பிக்கை உதயமாகும்.
வா வாவென
வரவேற்போம் 2013யை
சாதி மத இனம் எனும்
எல்லைகளை அகற்றி
அரசியல்வாதிகளின்
அகங்காரங்களை ஒழித்து

DSC02701-001

நீதி சமத்துவம் நிலைபெற
போலிச் சாமிகள் மறைந்துபோக
மூடநம்பிக்கைகள் அற்றொழிய
இல்லாமை இல்லாததாக
எல்லோரும் ஒன்றாய் இணைந்து
இனிமையும் நலமும் பெற
தொடர்ந்து உழைத்திடுவோம்.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0