Bye Bye 2012, வளமுடன் வருக 2013

Standard

Bye Bye 2012
வருத்தமொன்றில்லை
விடைபெற்று நீ செல்வதால்
கழுத்தறுத்தாய்
எனக் கடுப்புமில்லை.
பீடமேற்றினாய்
எனப் பெருமையுமில்லை.

DSC02713-001
அமைதியைக் கொடுத்தாய் என்றாலும்
எட்ட வேண்டிய இலக்குகளை
எட்டாத தொலைவிற்கு
அப்புறப்படுத்த முனைபவர்
தொல்லைகள் பல.

DSC02783-001

புதிய நம்பிக்கை உதயமாகும்.
வா வாவென
வரவேற்போம் 2013யை
சாதி மத இனம் எனும்
எல்லைகளை அகற்றி
அரசியல்வாதிகளின்
அகங்காரங்களை ஒழித்து

DSC02701-001

நீதி சமத்துவம் நிலைபெற
போலிச் சாமிகள் மறைந்துபோக
மூடநம்பிக்கைகள் அற்றொழிய
இல்லாமை இல்லாததாக
எல்லோரும் ஒன்றாய் இணைந்து
இனிமையும் நலமும் பெற
தொடர்ந்து உழைத்திடுவோம்.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

4 responses »

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

    அன்புடன்
    மதுரைத்தமிழன்

  2. போன ஆண்டை வாழ்த்துகிறீர்களா அல்லது அடக்கம் காரணமாகப் பக்குவமாகத் திட்டுகிறீர்களா தெரியவில்லை, டாக்டர். நானறிந்தவரை கடந்த ஆண்டு உங்களின் காலை வாரிவிடவில்லை. நிறையவே நீங்கள் சாத்தித்துருக்கிறீர்கள்; மற்றச் சாதனையாளர்களுக்கும் தோள் கொடுத்திருக்கிறீர்கள். எக்கச்சக்கமாக எழுதியிருக்கிறீர்கள், எழுதியவற்றை வாசிக்கும்படியாக எழுதியிருக்கிறீர்கள்; உலகப் படத்தில் இல்லாத நாடுகளிலுள்ள நண்பர்களெல்லாம் உங்கள் மருத்துவக் கருத்துகளையும் வழிகாட்டல்களையும் போற்றுகிறார்கள், பின்பற்றுகிறார்கள். எனவே உங்கள் எழுத்து வேலையைத் தொடர்ந்து மக்கள் சேவையாகக் கருதிச் செயற்படுங்கள். மேலை நாட்டிலுள்ளவர்கள் இவற்றைக் காசாகப் பார்க்கிறார்கள். நீங்கள் உங்கள் தந்தை கற்பித்த வழியில் அறிவாகவும் வாழ்வின் வழியாகவும் பார்க்கிறீர்கள். பூக்கள், மரங்கள் மற்றும் உயிருள்ள, உயிரற்ற எத்தனையோ மீது உங்கள் கவி வரிகள் பொன்னாடை போர்த்துகின்றன. முக நூலில் உங்களைச் சந்திப்பது ஒருசிலருக்குப் பொழுதுபோக்காக இருக்கலாம் ஆனால் என்னைப் பொறுத்தவரை நீங்கள் என் வீட்டு வாசலுக்கு அன்றாடம் வந்து நலன் விசாரிப்பவர்கள். நன்றிகள் பல, டாக்டர் முருகானந்தம். வாழும்வரை வாழவைப்போம்!

  3. “சாதி மத இனம் எனும்
    எல்லைகளை அகற்றி
    அரசியல்வாதிகளின்
    அகங்காரங்களை ஒழித்து
    நீதி சமத்துவம் நிலைபெற
    போலிச் சாமிகள் மறைந்துபோக
    மூடநம்பிக்கைகள் அற்றொழிய
    இல்லாமை இல்லாததாக”

    அழகான வாழ்த்து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s