திருடாதே என் குழந்தைக்கானதைத் திருடாதே…

Standard

திருடாதே
பாலைத் திருடாதே
என் குழந்தைக்கானதைத்
திருடாதே
திருடிப் பெற்றதை
உன் குழந்தைக்கு ஊட்டாதே

SDC14063-002

பாசாங்கு பண்ணாதே
சுரக்காது என பொய்யாதே
நொறுக்குகளை மெல்லாது
தின்பது போசணையானால்
சுரக்கும் பால் நிறைவாக.

உன்னழகு கெடுமென்ற
மடைமைச் சிந்தனையின்றி
என் வாரிசிற்கு என் பாலென
உணர்வு சொரிய ஊட்டினால்
மேலும் சொரியும் பால்.

மனம் வேண்டும்.
மனமிருந்தால்
மிஞ்ச மிஞ்சச் சுரக்கும்
இது மருத்துவம் கண்ட உண்மை.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

3 responses »

  1. //உன்னழகு கெடுமென்ற
    //மடைமைச் சிந்தனையின்றி
    என் வாரிசிற்கு என் பாலென
    உணர்வு சொரிய ஊட்டினால்
    மேலும் சொரியும் பால்.//

    நல்ல அருமையான வரிகள்

    சில மாடல் அழகிகள் அழகைக்கூட்ட கற்பம் தரித்து பிறகு கரு கலைப்பு செய்துவிடுகிறார்களாம்.
    பணத்திற்க்காக கரு உருவாக்கி கலைப்பவர்கள் இருக்கும்போது வாய்பேசாத பசுவின்பாலை திருடுவதா தப்பாக தெறியப்போகிறது..

  2. உணர்வு சொரிய ஊட்டினால் மேலும் சொரியும் பால். ஊட்டி வளர்க்கும் வகையே
    ஃபீடிங் புட்டி, டப்பா பால்,,பதப்படுத்திய உணவு என சிந்திப்பவர்க்கு நல்ல புத்திமதி.
    பசுவின் வாய் பேசமுடிந்திருந்தால் அது சொல்லும் பேச்சை நீங்கள் சொல்லிவிட்டீர்களென, நன்றி நவின்றிருக்கும்.. மனதைத் தொடுகிறது.கவிதை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s