தைப்பொங்கல் பட்டம்

பதிவின் வடிவம்

அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

பட்டம் ஏற்றுபவர்களுக்கு
தைப்பொங்கலுக்காகக் காத்திருப்பார்கள்.
அக் காலம் விசேடமானது.
வாடைக்காற்று வீச
வானில் மேலெழுந்து
பாயும் பட்டங்கள்
பட்டாம் பூச்சிகளாகமின்னிடும்
அழகு வார்த்தைகளில் அடங்காது.
குழந்தைகளாக பட்டம் ஏற்றிய நினைவுகள்
பட்டங்கள் மேலெழுந்து
பறப்பது போலக் கிளர்ந்த எழும்.

கவிஞர் யாழ்ப்பாணனனது கவிதை ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

SDC12893-001

பட்டம் ஒன்று பறக்குது பார்
பனையின் உயர நிற்குது பார்
வெட்டவெளியில் விந்தையுடன்
விளையாட்டுக்கள் புரியுது பார்

DSC02891-001
குத்துக் கறணஞ் சிலபோடும்
குதித்துக் கிளம்பி வானேறும்
பத்து முழுத்துப் பாம்பெனவே
பாங்குடன் நின்றும் அசைந்தோடும்.

SDC14084-002
தம்பி வந்து பட்டம் பார்
தாவிக் குதிக்கும் அதுவோ பார்
நம்பி உனது கைதனிலே
நானுங் கயிற்றைத் தரமாட்டேன்.

SDC12909-001
ஐயோ எனது பட்டமெங்கே
அறுத்துக் கொண்டே ஓடுதடா
கையோடிங்கு சில முழத்துக்
கயிறுதானே காணுதடா.

DSC02892-001

இது கவிஞர் யாழ்ப்பாணனனது கவிதை.

எனது பிறந்த ஊரான வியாபாரிமூலைச் சேர்ந்த திரு.வே.சிவக்கொழுந்து என்ற பெயருடைய அவரது கவிதை நூலான ‘மாவைக்கு மாலை” யிலிருந்து எடுக்கப்பட்டது.

நூல் வெளியானது ஆகஸ்ட 1948 ல் ஆகும்.

SDC14209-002

0.0.0.0.0.0.00

Advertisements

3 responses »

 1. அருமையான கவிதை, பொருத்தமான படங்கள். பழைய இனிய வசந்த ஞாபங்களை மீட்பதற்கு துணைபுரிகின்றன. பாராட்டுக்கள்.

  நன்றி.

  குரு அரவிந்தன் – கனடா

 2. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

  “வாடைக்காற்று வீச
  வானில் மேலெழுந்து
  பாயும் பட்டங்கள்
  பட்டாம் பூச்சிகளாகமின்னிடும்
  அழகு வார்த்தைகளில் அடங்காது.”

  அழகிய ஞாபகங்களை அசை போடா வைத்துவிட்டீர்கள்.
  படங்கள் மிக மிக அழகு அருமை …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s