புறா விடு தூதும் வேண்டாது கிட்டிய வரமும்

பதிவின் வடிவம்

புறா விடு தூது…
மயில் விடு தூது…
மான் விடு தூது…
அன்னம் விடு தூது..
நாரை விடு தூது
வண்டு விடு தூது
காலமெல்லாம்
காலாவதியாகிவிட்டது

இது!
ஓட்டோவிடு தூது
கார் விடுதூது
ப்ளையிங் கிஸ் விடுதூது
பஸ்சில் இடிவிடு தூது
எஸ்எம்எஸ் விடு தூது
ஈமெயில் விடுதூது
என்றாக ஆகிவிட்டது

தூது எதுவும்
விடவில்லை
மேல் வீட்டில் வந்திருந்து
நோட்டமிடுபவரை
நோட்டமிடுகிறேன்
நான்.

அரிசி பருப்பு ஏதேனும்
சிந்தியிருக்கிறதோ
பூச்சாடிக்குள் பூச்சி புளு
மறைந்திருக்கிறதோ
வாய்த்தால் வாயில்
போட்டுக்கலாம்
பொச்சடிக்கிறார்.

இவர் இருப்புக் கண்டு
இன்னுமொருவர்
வந்து சேர்ந்தார்
துணை தேடி வந்தாரோ
சுகித்திருக்க நினைத்தாரோ
இல்லை
இவருக்கும்
வயிற்றுப் பசிதானோ

மனிதனுக்குத்தான்
பெண்ணைக் கண்டால்
காலநேரமின்றிக்
காதலிக்கவும் தோன்றாது
காமம் கிளர்ந்தெழுகிறது.

பின்னொருமுறை
வீதி வலம் வரும்போது
கூடியிருந்தார்கள்
கூட்டமாய்
வேறொன்றுமில்லை !
காலியான அரிசி மூடையை
வீசியிருந்தார்கள் வீதியோரம்
ஓரிரு பருக்கையேனும்
கிடைக்குமா
தேடல் நடக்கிறது.

இவர் கொழு கொழுத்த புறாவாகும்
வசதியானவர்
கூடு கட்ட வேண்டியதில்லை
கூட்டுக் குடும்பமாக
கோயில் கூட்டில் வாசம்
இலவசமாகத்தான்.

பூசகரும் யாசகரும்
இறைவனுக்கு அர்ப்பணிப்பதில்
மிச்சமெல்லாம் இவர்கள்
வயிறு நிறைக்கும்

பசியிருந்து பட்டினி கிடந்து
குளித்து நோன்பிருந்து
நெற்றியிலும தொப்பையிலும்
நீறணிந்தாலும்
பக்கதனுக்கு கிடைக்காது வரம்
நோகாமல் அருகிருந்து
வயிறார ஆதரவு பெறுகின்றார்
தேடாத வரமாக

0..0.0.

Advertisements

12 responses »

 1. அருமை..

  //பசியிருந்து பட்டினி கிடந்து
  குளித்து நோன்பிருந்து
  நெற்றியிலும தொப்பையிலும்
  நீறணிந்தாலும்
  பக்கதனுக்கு கிடைக்காது வரம்
  நோகாமல் அருகிருந்து
  வயிறார ஆதரவு பெறுகின்றார்
  தேடாத வரமாக//

  இப்போதெல்லாம் பக்தனுக்கு எதுவும் கிடைப்பதில்லை சுரண்ட படுவதுதான் உண்மை..

  • உண்மை சபாரத்தினம் சபாகரன். பக்தனுக்கு எப்பொழுது எது கிடைத்ததது. எப்பொழுதும் ஏமாற்றம்தான்.
   ஆனால் சடங்கு சம்பிரதாயங்களால் வாழ்வில் ஒரு நம்பிக்கையை பெறுகிறானே. அது அவனுக்கு பல தருணங்களில் அருமருந்தாகக் கைகொடுப்பதையும் மறுப்பதற்கில்லை

 2. நா(ன்) விடும் தூது…….

  மிகுதிகளால் புறா ஆதரவு பெறுவதில்
  ஆட்சேபனை இல்லை.
  ஆனால் பல தருணங்கள்
  யார் நாவும் சேராது
  பாழாகிப்போகும் பால்
  பழகிவிட்டது சந்நிதிகளில்
  இதுவரை மண்ணில்
  பால் மரமும் முளைக்கவில்லை
  பால் குடித்த பாலை மண்ணும்
  சோலையாகிப் போகவில்லை

  சலித்துப் போகும் ”சமயம்”

  • பாலும் பருக்கையும் “நாவும் சேராது பாழாகி” போவதையிட்டு யார் அக்கறைப்படுகிறார்கள்.

   புரிதலின்றி, மீள் பரிசீலனை செய்யப்படாது கடைப்பிடிக்கப்படும் சடங்களால் வீண்விரயத்துடன், சுகாதாரக் கேடும் சேர்ந்துள்ளதை கருத்துரையில் விளக்கியதற்கு நன்றி.

  • அருமையான ஆலோசனை வோகன்.

   புறாபுக் என்பது எமது பாரம்பரிய வாழ்வின் நினைவுகளை எழுப்புவதாக இருக்கும்.
   மென்பொருள் தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு.

 3. “பசியிருந்து பட்டினி கிடந்து
  குளித்து நோன்பிருந்து
  நெற்றியிலும தொப்பையிலும்
  நீறணிந்தாலும்
  பக்கதனுக்கு கிடைக்காது வரம்
  நோகாமல் அருகிருந்து
  வயிறார ஆதரவு பெறுகின்றார்
  தேடாத வரமாக”

  அழகு.
  மிகவும் ரசித்தேன்.
  படங்களும் மிக மிக அருமை…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s