Monthly Archives: ஏப்ரல் 2013

கூந்தலின் அகந்தை

தரநிலை

கூர்ந்து பார்ப்பார்
கரும் தலைமுடியை
மேவி மறைத்திட்ட
ஓரிரு
நரை முடியை
கண்ணுற்றனரோ என
சோர்ந்திட மாட்டேன்

DSC04314-001

மேலும் பார்ப்பர்
நீண்டு வளர்ந்து
அடர் கொடியென
திரள் வனப்புடன்
தொடை தவழ்வதை
மோகித்துப் பார்ப்பர்

SDC14353-001

கார்மேகக் கூந்தலென
முன்னழகை வியந்து பார்ப்பர்
பக்க அழகில் மயங்கி நிற்பர்
பின்னழகை ரசித்துப் பார்ப்பர்

DSC04321-001

வண்ணத்துப் பூச்சி என
வனப்பை அள்ளிவீசும்
ஹேயர் கிளிப்பின்
அழகைத்தான் இரசிக்கிறார்கள்.
அறிந்தபோது
சோர்ந்துதான் போனேன்.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Advertisements

அம்மா நினைவாக……

தரநிலை

இன்று சித்ரா பெளர்ணமி தினமாகும்.
Image-001
பெளர்ணமி என்றால் போயா. விடுமுறை தினம் என்பதுதான் மட்டும்தான் பலருக்கு.

ஆனால் இன்னும் சிலருக்கு பெளர்ணமி என்றால் அம்மா. அம்மா அம்மா …. எனக்கும்தான்.

வானமெல்லாம் ஒளிரப் பூத்து நின்று எங்களை மகிழ்வித்த முழு நிலவு எங்கள் அம்மா, உங்கள் எல்லாரது அம்மாக்களையும் போலவே.

ஒவ்வெர்ரு உயிரையும் பெற்றெடுத்து துலங்கச் செய்தவள் அந்த அம்மாதான்.

மனதெல்லாம் நிறைந்திருப்பவள். நாளெல்லாம் கூடவே இருந்து அன்பைப் பொழிந்தவள்.

அவளை இழப்பது எத்துணை துணரமானது.

Family-001ஒரு கணத்தில் கண் மூடியவள் அவள். குழந்தைகள் எல்லாம் துயருறுவோம் என எண்ணியோ என்னவோ மருத்துவமனையில் கண் திறந்து எல்லோரையும் ஒருதரம் பார்த்துவிட்டு நிரந்தரமாகக் கண் மூடி 10 வருடங்களும் 3 மாதங்களும் பறந்துவிட்டன.

பறந்துவிட்டாளே ஒழிய மறைந்து விடவில்லை. ஊனோடும் உடலோடும் உயிரோடும் நினைவோடும் நிரந்திரமாகக் கலந்து விட்ட அம்மாவை நினைக்க
வருடாவருடம் சித்ரா பெளர்ணமி போதுமா?
மாதாமாதம் வரும் பெளர்ணமிகள் போதுமா?

நாளெல்லாம் பெளர்ணமியே. தினமெல்லாம் அம்மாக்களே.

அம்மா நினைவாக 2009ல் எழுதியது நினைவழிவு உனக்குமானதோ

நீரில் தவழும் வானில் மிதந்து மஞ்சு தழுவி …..

தரநிலை

SDC14365-001

எழில் நிழல்களே
எழில் நிழல்களே
கழிவுகள் கடலை நாடி ஓடும்
கால்வாயின் கரு நீரிலும்
ஒளிவிடல் காணச்
சிலிர்க்கிறது மனது
நீரில் மிதந்து வருகினறன
குவி மேகங்கள்

SDC14366-001
தளர் நடனமாடுகினறன
தாவரங்கள்
கம்பி வேலி
கிடுகிடுக்கிறது
சிமென்டுச் சுவர்
தளர்ந்து விழுமோ எனப்
பயங் காட்டுகிறது

SDC14374-001

நீர் துழாவி
நீல வானில் மிதந்து
மஞ்சு தழுவி
கூடி நீந்த
ஏங்குகிறது மனது
எட்ட விரட்டுகிறது
சேற்று நீர்

எம்.கே.முருகானந்தன்

00.0.00

இறப்பில் ஜனனம்

தரநிலை

நேற்று வாழ்ந்ததை
இன்று இழப்பது
இறப்பு
இன்று இழந்ததை
நாளை பெறுவது
பிறப்பு.

M.K.Muruganandan
யாருக்கு
என்று எப்போது
அறியாத சூழ்ச்சிச் சக்கரத்தில்
இன்றைய வாழ்வு.

DSC04143-001

சக்கரத்தை புறமொதுக்கி
நம்பிக்கை
கிளர்ந்தெழ
தளர்ந்தவனுக்கு
கரம் நீட்டி
சுற்றம் மகிழ
வாழ்வது
பெருவாழ்வு
DSC04099-001

எம்.கே.முருகானந்தன்

கண்டமின்றி நஞ்சுமிழும் உனக்கு இணையுண்டோ?

தரநிலை

DSC04096-002

ஆதவன் உடல்
சோர்ந்து துயிலுறும்
இருள் போர்த்திய இரவுகளிலும்
ஓயாது விழித்திருந்து
வெள்ளிழைகளால்
வலை பின்னுகிறாய்
கைதேர்ந்த கலைஞானியின்
கலை நுட்பத்தை
விஞ்சிவிடும் ஆற்றல்
எங்கிருந்து பெற்றாயோ?

DSC03995-001
நீ இழைக்கும்
நூல் இளைகள்
காற்றின் வீச்சினில்;
கலைந்துவிடுமென
தோற்றத்தில் மெல்லியதாய்
மாயத்தோற்றம் காட்டினாலும்
வலுவும் நீட்சித் திறனும்
கொண்டவையாமே

DSC04095-001
எட்டுக்கால் உள்ள போதும்
துள்ளிப் பாய மாட்டாய்
சப்பிச்சுவைத்திட
பல்லில்லாக் கிழவியாம்
உணர்விழைகளும்
இல்லாத போதும்
பூச்சி புழுக்களை
நீ உமிழும் திரவத்தில்
கரைத்து நீர்மமாக்கி
உறிஞ்சி உண்டுவிடுகிறாய்
கரந்துறையும் ஜீவன் நீ
DSC03998-001
உன் உறவுகள் அரை
இலட்சத்தையும் தாண்டுமாமே
பூவுலகில் முன்னூறு மில்லியன்
ஆண்டுகள் வாழ்ந்துவிட்டாயாமே
அப்பாவிபோல
என்வீட்டு மரஞ்செடியில்
வலைவிரிந்து உறங்கிறாய்
முட்டையிட்டு
கூட்டுப் புளுவாகி
பரம்பரை பெருக்குகிறாய்
DSC04091-001
நஞ்சுண்டு கொல்லுகிறாய்
ஸ்பைடர்மான்
எனத் திரையிலும் வருகிறாய்
நஞ்சுண்டகண்டனென
சிவனைத் துதிப்பர்
கண்டமின்றி
நஞ்சுமிழும் உனக்கு
இணையாவானோ?

DSC04000-001

எம்.கே.முருகானந்தன்

0.0.0..0.0.

நாம்பன் குரல் கேட்கிறதோ?

தரநிலை

துடை அடிபட
முலை குலுங்கிட
நெடு வால் நடமிட
கிடு கிடுவென
நெடு நடை நடந்து
விடுவிடுவென
செல்வதெங்கே?
Photo1306-001
காமம் கிளர்ந்திட
விதை ஒடுங்கிட
குறி திமிர்த்திட
வாவென்றழைக்கும்
நாம்பன் குரல்
கேட்கிறதோ?
நெடுந்தொலைவினில்

SDC14062-002

அம்மாவென
ஏங்கி நிற்கும்
கன்றுக்குட்டியையும்
மறந்தாயோ?

 

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

பூனையாரே பூனையாரே எங்கே போனீர்?

தரநிலை

“பூனையாரே பூனையாரே எங்கே போனீர்?”
“வீதியோரம் காலாற உலாத்தப் போனேன்”
SDC13653-001
“பூனையாரே பூனையாரே அங்கே என்ன செய்தீர்?”
“சுண்டெலி. தவளை தவனமெடுக்கத் தேடிப் போனேன்.”

“பூனையாரே பூனையாரே வேறு என்ன செஞ்சீர்?”

“மண்ணைக் கிளறி… சொல்ல வெக்கமாயிருக்கு..”

“”பூனையாரே பூனையாரே அதை யாரும் பார்த்தாரோ”

“பதுங்கி பதுங்கி வந்தான் ஒருவன்”

“”பூனையாரே பூனையாரே உங்களைப் பிடிக்கவோ?”

“கமரா தூக்கி வந்த குட்டி மனிதன் அவன்.
கு்ர் குர் எனச் சீறி உறுமினேன்.

கிளிக் பண்ணின கையோடு
ஓடிப்போனான்
குண்டியிலை காலடிக்க.”

0.0.0.0.0.0.0

எம்.கே.முருகானந்தன்