கண்டமின்றி நஞ்சுமிழும் உனக்கு இணையுண்டோ?

பதிவின் வடிவம்

DSC04096-002

ஆதவன் உடல்
சோர்ந்து துயிலுறும்
இருள் போர்த்திய இரவுகளிலும்
ஓயாது விழித்திருந்து
வெள்ளிழைகளால்
வலை பின்னுகிறாய்
கைதேர்ந்த கலைஞானியின்
கலை நுட்பத்தை
விஞ்சிவிடும் ஆற்றல்
எங்கிருந்து பெற்றாயோ?

DSC03995-001
நீ இழைக்கும்
நூல் இளைகள்
காற்றின் வீச்சினில்;
கலைந்துவிடுமென
தோற்றத்தில் மெல்லியதாய்
மாயத்தோற்றம் காட்டினாலும்
வலுவும் நீட்சித் திறனும்
கொண்டவையாமே

DSC04095-001
எட்டுக்கால் உள்ள போதும்
துள்ளிப் பாய மாட்டாய்
சப்பிச்சுவைத்திட
பல்லில்லாக் கிழவியாம்
உணர்விழைகளும்
இல்லாத போதும்
பூச்சி புழுக்களை
நீ உமிழும் திரவத்தில்
கரைத்து நீர்மமாக்கி
உறிஞ்சி உண்டுவிடுகிறாய்
கரந்துறையும் ஜீவன் நீ
DSC03998-001
உன் உறவுகள் அரை
இலட்சத்தையும் தாண்டுமாமே
பூவுலகில் முன்னூறு மில்லியன்
ஆண்டுகள் வாழ்ந்துவிட்டாயாமே
அப்பாவிபோல
என்வீட்டு மரஞ்செடியில்
வலைவிரிந்து உறங்கிறாய்
முட்டையிட்டு
கூட்டுப் புளுவாகி
பரம்பரை பெருக்குகிறாய்
DSC04091-001
நஞ்சுண்டு கொல்லுகிறாய்
ஸ்பைடர்மான்
எனத் திரையிலும் வருகிறாய்
நஞ்சுண்டகண்டனென
சிவனைத் துதிப்பர்
கண்டமின்றி
நஞ்சுமிழும் உனக்கு
இணையாவானோ?

DSC04000-001

எம்.கே.முருகானந்தன்

0.0.0..0.0.

ஒரு மறுமொழி »

  1. ஆஹா! சிலந்திக்கு இப்படி ஒரு அழகான கவிதையா? சிலந்தியின் வாழ்வையே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்களே, ஐயா!
    ரொம்பவும் ரசித்தேன்!

  2. நோய்வந்தால் மருந்து தருவீர்கள் என வலைவிரித்து குடும்பமாக வசிக்கின்றதோ 🙂

    படம் நன்றாக இருக்கின்றது.

    • நன்றி மாதேவி.
      நஞ்சு உமிழ்ந்து வயிறு நிரப்பும் ஜீவனுக்கு
      என் மருந்தெதற்கு
      தப்பினால் போதும் என ஓட்டம் எடுக்க வேண்டிய நிலை எனக்கு

  3. நிதானம் தாங்கிய வேகம்:

    /எட்டுக்கால் உள்ள போதும்
    துள்ளிப் பாய மாட்டாய்/
    /ஆதவன் உடல்
    சோர்ந்து துயிலுறும்
    இருள் போர்த்திய இரவுகளிலும்
    ஓயாது விழித்திருந்து/

  4. வணக்கம்
    ஐயா

    வலைத்தள உறவுகளுக்கு
    வலை பின்னும்
    சிலந்தியின் பின்னல் அழகை
    கவியாக வடித்து
    வாசக உள்ளங்களுக்கு
    கவி விருந்து அளித்தமைக்கு
    மிக்க நன்றி ஐயா
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  5. நஞ்சுண்டகண்டனென
    சிவனைத் துதிப்பர்
    கண்டமின்றி
    நஞ்சுமிழும் உனக்கு
    இணையாவானோ….

    மனிதனுக்காய் இயற்கை என்ற நிலை இன்று
    இயற்கையில் மனிதனும் சிலந்தியும் ஒன்றே
    அஃறிணைக்காய் கவி வடிக்கும்
    உங்கள் பணி

    வாழ்த்துக்கள்

  6. “நஞ்சுண்டு கொல்லுகிறாய்
    ஸ்பைடர்மான்
    எனத் திரையிலும் வருகிறாய்
    நஞ்சுண்டகண்டனென
    சிவனைத் துதிப்பர்
    கண்டமின்றி
    நஞ்சுமிழும் உனக்கு
    இணையாவானோ?”

    வலையில் வலைக் கவிதை மிக அருமை.
    படித்து ரசித்தேன்.

Dr.M.K.Muruganandan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி