அம்மா நினைவாக……

பதிவின் வடிவம்

இன்று சித்ரா பெளர்ணமி தினமாகும்.
Image-001
பெளர்ணமி என்றால் போயா. விடுமுறை தினம் என்பதுதான் மட்டும்தான் பலருக்கு.

ஆனால் இன்னும் சிலருக்கு பெளர்ணமி என்றால் அம்மா. அம்மா அம்மா …. எனக்கும்தான்.

வானமெல்லாம் ஒளிரப் பூத்து நின்று எங்களை மகிழ்வித்த முழு நிலவு எங்கள் அம்மா, உங்கள் எல்லாரது அம்மாக்களையும் போலவே.

ஒவ்வெர்ரு உயிரையும் பெற்றெடுத்து துலங்கச் செய்தவள் அந்த அம்மாதான்.

மனதெல்லாம் நிறைந்திருப்பவள். நாளெல்லாம் கூடவே இருந்து அன்பைப் பொழிந்தவள்.

அவளை இழப்பது எத்துணை துணரமானது.

Family-001ஒரு கணத்தில் கண் மூடியவள் அவள். குழந்தைகள் எல்லாம் துயருறுவோம் என எண்ணியோ என்னவோ மருத்துவமனையில் கண் திறந்து எல்லோரையும் ஒருதரம் பார்த்துவிட்டு நிரந்தரமாகக் கண் மூடி 10 வருடங்களும் 3 மாதங்களும் பறந்துவிட்டன.

பறந்துவிட்டாளே ஒழிய மறைந்து விடவில்லை. ஊனோடும் உடலோடும் உயிரோடும் நினைவோடும் நிரந்திரமாகக் கலந்து விட்ட அம்மாவை நினைக்க
வருடாவருடம் சித்ரா பெளர்ணமி போதுமா?
மாதாமாதம் வரும் பெளர்ணமிகள் போதுமா?

நாளெல்லாம் பெளர்ணமியே. தினமெல்லாம் அம்மாக்களே.

அம்மா நினைவாக 2009ல் எழுதியது நினைவழிவு உனக்குமானதோ

Advertisements

11 responses »

 1. அம்மாவைப் பற்றிய பௌர்ணமி நினைவு! நிலவு தேய்ந்து மறைந்தாலும் அம்மாவின் நினவு என்றென்றும் வளர்ந்து கொண்டே, மனதில் ஒளி வீசிக் கொண்டே தான் இருக்கும் பௌர்ணமி நிலவை போல!

 2. விரதத்தை முடித்துக் கொண்டு திறந்தால் , உங்கள் அம்மா -தரிசனம் மிக நெகிழ்வாக இருந்தது.
  நற்றவ வானிலும் நனிசிறந்தவர் ! அம்மா

 3. அன்புக்குரியவர்களின் நினைவுகள் ஒருபோதும் நீங்குவதில்லை. எப்பவுமே கூடவே இருக்கும்.
  என்ன இப்படி விசேட நாட்களில் இன்னும் கொஞ்சம் அதிகமாக அவர்களுடனான நினைவலைகள் சுனாமியாய் மனதில் மோதும். அது இயல்பே…

  ஆனாலும் அவர்களின் தூய அன்பு எந்தத் தருணத்திலும் துணைநிற்கும்…
  அது உண்மை.

 4. “வானமெல்லாம் ஒளிரப் பூத்து நின்று எங்களை மகிழ்வித்த முழு நிலவு எங்கள் அம்மா”

  ஆம்..
  அம்மா – அன்பு.
  அன்புக் கவிதை அழகு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s