Monthly Archives: ஜூன் 2013

இலைகளின் நந்தவனத்தில் நினைவெழுப்பும் சகியே

தரநிலை

நீ போடும் கோலங்கள்
என் உள்ளத்தின் கீதங்கள்
கட்டாந் தரையும்
உன் கைவண்ணதில்
ரவிவர்மாவை நினைவழைக்கும்

DSC04393-002

வண்ண வண்ணமாய்
நீ வரைந்த ஓவியங்கள்
பூவிரித்த செடியினையும்
நாணவைக்கும்

DSC04396-001

குயில் கீதமிசைக்கும்
மைல்கள் களிநடனம் புரியும்
கிள்ளை மொழியும் கிளிகள்
மருண்டு ஓடும் மான்கள்
உன் நினைவில் துயில்வேன்
மந்த மாருதம் வீச
விரைந்து ஓடி வா
கூடிடுவோம் சகியே

SDC13631-001

எம்.கே.முருகானந்தன்

0.0.0.

Advertisements

சிதையில் தீ மூள சுடுகாலில் பறப்பர்

தரநிலை

மாடி வீட்டின் பல்கணி ஓரம்
காற்றும் ஒளியும்
தேடிக் களைத்து
நீரும் உரமும் யாசித்து
சோர்ந்த உலர்ந்தது
செடி.

உதிர்ந்த இலையும்
பூவும் சருகாகும்
அவையே
உதவும் உரமாக
மீளும் வாழ்வு
மறுபோது.

DSC04569-001

பெற்றவை பணம் தேடி
பிறதேசம் அலையும்
போசித்த கரங்கள்
போசனையின்றித்
பிறந்த மண்ணில் துவளும்
தம் கையே நம்பும்
தனிக்குகை வாழ்வு
முடியாதபோது
சோர்ந்து கருகும்
முதுமைகள்
ஏராளம்.

DSC04571-001

பிணத்திற்கு பூச்சூட்டி
சிதை மூட்ட
மணி முள்ளைப் பார்த்திங்கு
பறந்தோடி வருவர்
சிதையில் தீ மூள
மறு பிளேன்பிடிக்கப்
சுடுகாலில் பறப்பர்.

எம்.கே.முருகானந்தன்

0..0.0

உள்ளே சூலகம் பெண் மனது போல …………

தரநிலை

நிர்மல வானில் தவளும்
தூய வெண் மேகம்
பசும் சோலையில்
வெண் மலர்.
விறைத்து நீளும் குறியென
எழுந்து நிற்கும் ஸ்டைல் (style)
அதன் நுனியில்
அண்டச் சுரப்பியென ஸடிக்மா (Stigma).

SDC14437-001
உள்ளே சூலகம் (Ovary)
பெண் மனது போல
மறைந்திருக்கும்
அவள் மனதைத்
மிருதுவாய் தீண்டுதல்
கொள்ளை இன்பம்

SDC14439-001

திறந்த பொழுதில் சூல் கொள்ளும்
காயாய் கனியாய் விளை தள்ளும்
பெண்மையின் பூரிப்பு
அதில் மிளிரும்.

SDC14444-001

எம்.கே.முருகானந்தன்

0.00.0

மழையோடு காற்றடிக்க கடலோடு கரைந்தனர்

தரநிலை

மழையோடு காற்றடிக்க
கடலோடு அள்ளுண்டனர்
படகோடு கரைந்தழிந்தனர்
உறவுகள் கரைமீது
சிந்திய கண்ணீர்
சமுத்திரமானது.

SDC14430-001

ஆற்றின் கரையோரம்
விளைந்திருந்த செடி கொடிகள்
ஆற்றில் அள்ளுண்டு
கடல் நோக்கி விரைகின்றன

SDC14429-001

புலர்ந்ததும் உஷாரானார்
வானிலை அறிவிப்பு மையத்தினர்
“காற்றோடு மழை பெய்யும்
கடலில் இறங்காதீர் “

ஆழ் கடலில் மீன் தின்று
பிணமும் மீந்திடாதோர்
காதில் விழுந்திடுமோ
இவர்கள் அறிவிப்பு.

எம்.கே.முருகானந்தன்

00.0.00

அளவாகத்தான் போட்டிருக்காள் ஆத்தாள்

தரநிலை

அளவாகத்தான் போட்டிருக்காள்
ஆத்தாள்
சுளுவான சமையல்லல்ல
வெட்டி வதக்கி தாளித்து
கமகமவென நாவூற
அசைவப் பிரியர்களுக்கு ஆகாது.

DSC04403-003

கோழியில்லை கோலி ப்ளவர்
போஞ்சி கரட்
மீன் இல்லை வெங்காய சலடுடன்
கத்தரி பருப்பு உண்டு
பங்குக்கு வந்திடாதீங்க
குட்டி வயிறு பானையாகக் கூடாதென
அளவு சாப்பாடுதான்
போட்டிருக்காள் ஆத்தாள்.

SDC14357-001

எம்.கே.முருகானந்தன்

0.00.0

தூறல் இன்னமும் ஓயவில்லை

தரநிலை

சீறித் தணிந்தது மழை
சாம்பல் பூத்துக் கிடந்தது வானம்
தூறல் இன்னமும் ஓயவில்லை
பாதை ஓரம் வெள்ளம்
சுளித்து ஓடியது சாரையென

SDC14387-001
எம் வாழ்வின் புயல் தணிந்தது
சூழும் வஞ்சங்கள் ஓயவில்லை
நீர்த்து அழிக்க முனைகின்றன
நெளிந்து சுளிந்து படர்ந்தேனும்
வானின் சிகரில் மலர்வோம்
கண்ணின் சாரல் ஓயும்
மண்ணில் வாழ்வு நீளும்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0