சிதையில் தீ மூள சுடுகாலில் பறப்பர்

பதிவின் வடிவம்

மாடி வீட்டின் பல்கணி ஓரம்
காற்றும் ஒளியும்
தேடிக் களைத்து
நீரும் உரமும் யாசித்து
சோர்ந்த உலர்ந்தது
செடி.

உதிர்ந்த இலையும்
பூவும் சருகாகும்
அவையே
உதவும் உரமாக
மீளும் வாழ்வு
மறுபோது.

DSC04569-001

பெற்றவை பணம் தேடி
பிறதேசம் அலையும்
போசித்த கரங்கள்
போசனையின்றித்
பிறந்த மண்ணில் துவளும்
தம் கையே நம்பும்
தனிக்குகை வாழ்வு
முடியாதபோது
சோர்ந்து கருகும்
முதுமைகள்
ஏராளம்.

DSC04571-001

பிணத்திற்கு பூச்சூட்டி
சிதை மூட்ட
மணி முள்ளைப் பார்த்திங்கு
பறந்தோடி வருவர்
சிதையில் தீ மூள
மறு பிளேன்பிடிக்கப்
சுடுகாலில் பறப்பர்.

எம்.கே.முருகானந்தன்

0..0.0

Advertisements

12 responses »

 1. “பிணத்திற்கு பூச்சூட்டி
  சிதை மூட்ட
  மணி முள்ளைப் பார்த்திங்கு
  பறந்தோடி வருவர்
  சிதையில் தீ மூள
  மறு பிளேன்பிடிக்கப்
  சுடுகாலில் பறப்பர்.”

  உண்மை.
  உறக்க சொல்லுங்கள்

 2. ஐயா…
  //“பிணத்திற்கு பூச்சூட்டி
  சிதை மூட்ட
  மணி முள்ளைப் பார்த்திங்கு
  பறந்தோடி வருவர்
  சிதையில் தீ மூள
  மறு பிளேன்பிடிக்கப்
  சுடுகாலில் பறப்பர்.”//

  உள்ளத்தை மட்டுமல்ல உணர்வைத்தொட்ட கவி தந்தீர்கள்!

  மனமிருந்தும் வேறுவழியில்லா மாட்டுப்பட்ட வாழ்கை வாழும் எம்போன்ற வெளிநாட்டு வாழ்வியல்காரருக்கு வந்த சாபம் இது…
  உறவுகளுடன் வாழமுடியாது, அந்த உணர்வுகளில் கலந்துகொள்ள முடியாது, உள்ளத்தில் உணர்வுப் போரட்டத்துடன் படும்பாடு சொல்லிலடங்கா சோகங்கங்கள்!
  என்ன செய்வது?…. ;’(

  • மன்னிக்கவும். உங்கள் மனத்தை நோகச் செய்திருந்தால்.
   வேலைக்கும் வாழ்வுக்கும் உறவிற்கும் இடையில் ஈடாடவேண்டிய நிலையில் உள்ள வெளிநாட்டு சகோதரங்களின் திரிசங்கு நிலை புரிகிறது.
   நடப்பதையும் இங்குள்ள உறவுகளின் உணர்வுகளையும் வெளிப்படுத்த முயன்றேன்.
   யாராவது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருகிறேன்.

   • ஐயோ!.. இல்லை ஐயா.. எதற்கு பெரிய வார்தைகள் எல்லாம் சொல்கின்றீர்கள்.

    எங்களின் மனநிலையில் உறவுகளைப் பிரிந்த வலி அதிகம். அதிலும் இப்படியான சூழ்நிலையில் அங்கா இங்கா என அந்தரிக்கும் நிலையை அனுபவித்த கொடுமையால் அப்படி என் மன உணர்வினை கொட்டிவிட்டேன். நான்தான் மன்னிப்புக் கோரவேண்டும் இப்போது.
    மன்னிக்க வேண்டும் ஐயா!.

    நீங்கள் பொதுவாகத்தானே கூறினீர்கள் தப்பேதுமில்லையே…:)

 3. உங்களுடய ஒவ்வொரு தனித்தமிழ் பதிவுகளும் எங்களைப் போன்றோருக்கு எவ்வளவோ உதவியாக இருக்கிறது ஐயா.வாழ்க உங்கள் தொண்டு வளர்க தமிழ்.
  நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s