Monthly Archives: ஓகஸ்ட் 2013

மாலையிட இச்சை கொண்ட மஞ்சுகள்

தரநிலை

சிரம் தாழ்த்தி முகம் மறைத்து
கண் சிமிட்டுகிறாள்
வண்ண மலர் மகள்
உளம் நிறைந்து
கசிந்துருகும்
காதலை ஆதவனிடம்
கொண்டு செல்ல
மஞ்சுகளை
தூதுக்கு அழைக்கின்றாள்

SDC14606-002

வாஞ்சை கொண்ட மஞ்சுகளோ
மலர்வதன இதழ்களில்
முத்தமிட இச்சை கொண்டு
மணமாலை கரமேந்தி
ஆசை பொங்க
விரைந்து வருகின்றன

Photo1299-002

தூதுவரின் வஞ்சம்
புரியாத
வெள்ளையுள்ள
வண்ணச் சிங்காரிகளே
அவதானம்.

SDC14613-002nn

பனியுறையும் வெண் சருமங்களும்
ஞாயிறு உதிக்கும் தேசத்தவரும்
பொட்டுக்குள்ளால்
எட்டிப் பார்க்கும்
அண்டை வீட்டாரும்
தூது வந்து
ஏய்ந்து போன பின்னுமா
கண் திறக்கவில்லை?

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Advertisements

சுதந்திரக் கடலும் சொகுசான வீடும்

தரநிலை

அழகாகத் தானிருக்கிறேனாம்
வண்ணக் கலர் தொட்டி
குமிழ் குமிழாய்
காற்றுக் குமிழ்கள்
கூம்புபோல வாய் திறக்க
வேளா வேளைக்கு
வயிறாறச் சாப்பாடு
பார்த்து இரசிக்க கூட்டம்

DSC05131-002

கடல் நீரில் சுதந்திர நீச்சல்
ஒளிந்து விளையாட
பாறைகள் கடற் தாவரங்கள்
விட்டுத் துரத்தி வேட்டையாடி
ஜந்துகளைத் தின்னும்
ஆனந்தம்

DSC05129-001

இவையெல்லாம் கிடைக்குமா
இங்கு
தூவப்படும் குறுணல்களாய்
சுவையற்ற சாப்பாடு
கண் மூட விடாத
மின்னொளி வீச்சு

DSC05128-001

எல்லாம் கிடக்கும்தான்
ஆனால் இழந்தவை ஏராளம்
தோழர்களுடன் கூடி நீந்தியதும்
செல்லமாய் சண்டை இட்டதும்
ஆமைகளையும் விலாங்குகளையும்
சீண்டிக் களித்ததும்
இழந்தோம் வாழ்வை

DSC05150-001

சொகுசான வீடு
வசதிகளுக்கு குறைவில்லை
வயிறாற சாப்பிடலாம்தான்
ஆனால் இழந்த
சுதந்திரத்திற்கு
ஈடாகுமா இவை

எம்.கே.முருகானந்தன்

வேண்டாத விருந்தாளி சிரிக்கின்றார்

தரநிலை

வேண்டாத விருந்தாளி
மனம் நிறையச் சிரிக்கிறார்
கோணவில்லை எம் மனம்
குளிர்கிறது
கள்ளமற்ற
அவர் புன்னகையில்.

SDC13636-002

மண்ணிட்டு பசளை ஏற்றி
மறக்காது நீர் ஊற்றி
வளரும் செடி
கொத்துக் கொத்தாய் மலர் அரும்பும்
என்றிருந்தால்
எங்கிருந்தோ குடிகொண்ட
புல் இங்கு
புன்னகைக்கிறது மலர் சிலிர்க்க
வேண்டாத விருந்தாளி
ஆனாலும்
மனங் குளிர வைக்கிறார்
அது போதும் என்றிருப்போம்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

மருந்தாகும் பாகலும் இனிக்குதடி…

தரநிலை

பச்சைக் கம்பளமாய் தளிர்கள்
புதிரான மணம்
நாசி சிலிர்க்க வைக்கும்
மென் துளிர்கள்
மெத்தையென மெதுமை
இருந்தாலும்
தழுவக் கை கூசும்.

மருத்துவப் பலன் பலவுண்டாம்
நீரிழிவைத் தணிக்கும்
உண்மைதான்
மருந்துடன் சாறடித்துக் குடித்து
மயங்கி மருத்துவமனை
ஏகியோர் பலர் உணடு.

DSC00130-001 resized

விருந்தை மருந்தாக்கி
வினையைத் தேடாதீர்
கறி சமைத்து உண்ணுங்கள்
கதிமோட்சம் கிட்டாது
நாவிற்கும் உடலுக்கும்
நலமாகும்.

கசக்கும் பாகல்
என்றுதானிருந்தேன்.
இனிக்கவும் செய்தது
பாகற் குழம்பு
உன் கை பட்ட யாவுமே
இனிக்குதடி என் தேவதையே!

எம்.கே.முருகானந்தன்