மருந்தாகும் பாகலும் இனிக்குதடி…

பதிவின் வடிவம்

பச்சைக் கம்பளமாய் தளிர்கள்
புதிரான மணம்
நாசி சிலிர்க்க வைக்கும்
மென் துளிர்கள்
மெத்தையென மெதுமை
இருந்தாலும்
தழுவக் கை கூசும்.

மருத்துவப் பலன் பலவுண்டாம்
நீரிழிவைத் தணிக்கும்
உண்மைதான்
மருந்துடன் சாறடித்துக் குடித்து
மயங்கி மருத்துவமனை
ஏகியோர் பலர் உணடு.

DSC00130-001 resized

விருந்தை மருந்தாக்கி
வினையைத் தேடாதீர்
கறி சமைத்து உண்ணுங்கள்
கதிமோட்சம் கிட்டாது
நாவிற்கும் உடலுக்கும்
நலமாகும்.

கசக்கும் பாகல்
என்றுதானிருந்தேன்.
இனிக்கவும் செய்தது
பாகற் குழம்பு
உன் கை பட்ட யாவுமே
இனிக்குதடி என் தேவதையே!

எம்.கே.முருகானந்தன்

Advertisements

11 responses »

    • பலகனியில் முன்பொரு நாள் பாகற்செடி தானே வளர்ந்திருந்தது. அதன் புகைப்படம் எடுத்ததில் வந்த யோசனைதான். கருத்துரைக்கு நன்றி இளமதி

  1. அருமையான பதிவு எனக்கு சிறு வயதிலிருந்தே பாகற்காய் கறி ரொம்ப பிடிக்கும் வாய்கு சுவையானவை உடம்புக்கு கூடாதவை வாய்க்கு பிடிக்காதவை உடம்புக்கு பிரயோசனமானவை

  2. Dr. மிக அருமையான பதிவு. நன்றி. பாட்டி வீட்டு வைத்தியம் ஆங்கில மருந்து எடுக்காது உபயோகிக்பது தான் நல்லது!

    • என்னைப் போலவே உங்களுக்கும் கசக்கும் பாவற்காயில் பிடித்தம் இருப்பது மகிழச்சி.
      கசப்பில் இனிமை காணுவது எத்தனை பேருக்கு முடியும் பழனிவேல் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s