சுதந்திரக் கடலும் சொகுசான வீடும்

Standard

அழகாகத் தானிருக்கிறேனாம்
வண்ணக் கலர் தொட்டி
குமிழ் குமிழாய்
காற்றுக் குமிழ்கள்
கூம்புபோல வாய் திறக்க
வேளா வேளைக்கு
வயிறாறச் சாப்பாடு
பார்த்து இரசிக்க கூட்டம்

DSC05131-002

கடல் நீரில் சுதந்திர நீச்சல்
ஒளிந்து விளையாட
பாறைகள் கடற் தாவரங்கள்
விட்டுத் துரத்தி வேட்டையாடி
ஜந்துகளைத் தின்னும்
ஆனந்தம்

DSC05129-001

இவையெல்லாம் கிடைக்குமா
இங்கு
தூவப்படும் குறுணல்களாய்
சுவையற்ற சாப்பாடு
கண் மூட விடாத
மின்னொளி வீச்சு

DSC05128-001

எல்லாம் கிடக்கும்தான்
ஆனால் இழந்தவை ஏராளம்
தோழர்களுடன் கூடி நீந்தியதும்
செல்லமாய் சண்டை இட்டதும்
ஆமைகளையும் விலாங்குகளையும்
சீண்டிக் களித்ததும்
இழந்தோம் வாழ்வை

DSC05150-001

சொகுசான வீடு
வசதிகளுக்கு குறைவில்லை
வயிறாற சாப்பிடலாம்தான்
ஆனால் இழந்த
சுதந்திரத்திற்கு
ஈடாகுமா இவை

எம்.கே.முருகானந்தன்

6 responses »

  1. மனிதர்களுக்கு மட்டுமல்ல; மீனினங்களுக்கும் சுதந்திரம் அவசியம் தான். மனிதனின் எல்லாவற்றையும் தன் ஆளுகைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்னும் பேராசையால் பாவம் இதுபோல எத்தனை விலங்குகள் உள்ளுக்குள் அழுகின்றனவோ?

    வாயில்லா விலங்கின் அடிமைத்தனத்தை, சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற விருப்பத்தை மனதை நெகிழ்த்தும் வகையில் சொல்லியிருக்கிறீர்கள், ஐயா!

    மருத்துவரா இல்லை பிறவிக் கவிஞரா, தாங்கள்?
    பாராட்டுக்கள்!

  2. நன்றி ரஞ்சனி. ஆம் விலங்குகளும் ஜந்துகளும், மீன்களும் உள்ளுற வருந்துகின்றன.
    மனிதர்கள் பலரும் கூடவே
    நன்றி கருத்துரைக்கு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s