Monthly Archives: செப்ரெம்பர் 2013

அறுகரிசி தூவி உசசி மோந்து…

பதிவின் வடிவம்

DSC04660-001

தோளோடு தோள் பிணைய
கையோடு கை கோர்க்க
இடையோடு தொடை நெருங்க
குலவி மகிழும்
இவர்கள்
மறைந்து ஒளிந்து
நிற்பர்.

DSC04677-001

ஒன்றுள் ஒன்றாக
உதடுகள் துளாவ
துடித்துப் பிணைந்து
அளாவிய உறுப்புகள்
சோர்ந்து தளைய
சுடுமூச்சு சிந்தாதீர்
பெருமூச்சாய் மாறிவிடும்
கவனம்

DSC04925-001

காலம் காத்திருக்கிறது
பாதைகளும் பலவுண்டு
வேண்டாத கர்ப்பம்
சுமக்கும் வேதனை வேண்டாம்.
வசந்தத்தைக் காத்திருங்கள்.

SDC12786-001

ஊராரும் உற்றாரும்
உறவினரும் பெற்றாரும்
உளம் நிறைய
அறுகரிசி தூவி
உசசி மோந்து
மங்கலமாய் வாழ்த்தும்
மணமேடைக் காலம்
வந்திடும் விரைவாக
பொறுத்திருங்கள்

எம.கே.முருகானந்தன்

சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து …..

பதிவின் வடிவம்

மிருதுவானவள் நீ
நொறுங்கி வீழ்ந்திடுமோ என
நெஞ்சைப் பதறவைக்கும் மென்மை
வீசும் காற்றும்
அலையாய் மோதும் நீரும்
உலைக்காது உன்னுடலை
உள்ளார்ந்தது உன் உள்வலு
எள்ளவும் சிதையாது
இடுக்கண்ணில் வழுவி
மிதந்து நிற்கிறாய்

DSC04971-002
கண்ணே
தாமரை மலர் நீ
பட்டும் படாமல்
நீரில் மிதக்கும்
கலை தெரிந்தவள்
உள்ளத்தைத் தொட்டவன்
நானா இல்லையா
சொல்லாமல் நழுவுகிறாய்
கை பிடிக்க ஏங்குது
உள்ளம்

DSC04973-002

எம்.கே.முருகானந்தன்

வடக்கே போகும் ரயில்

பதிவின் வடிவம்

விரைவுப் பயணங்கள்
வடக்கு நோக்கி
ஆராவாரித்து
சென்றன.
வளங்கள் முதல்கள் நாடி
வங்கிகளும் நிறுவனங்களும்
காலடி பரப்பின.

DSC04666-001

வழங்குவர் அனைத்தும்
என நம்பிய
வாடி வதங்கிய மனிதர்,
முகம் மலர
கைநீட்டி வரவேற்று,
ஏமாற்றத்தில்
விழி சோர்ந்தனர்

DSC04664-001N

மீண்டும்
அதிவிரைவுப் பயணங்கள்
புகையிரதமும்
அரசியலாளர்களும்
அள்ளிக் கொடுக்கவா
அள்ளிக் கட்டவா?

DSC04665-001NN

எம்.கே.முருகானந்தன்

0.00.0.00.0

தெருவோரம் நிதம் மலர்ந்து அழகு சுமந்து ……….

பதிவின் வடிவம்

நாளாந்தம் பூத்துப் பூத்து
அழகு சுமக்கிறோம்.
தேடி வந்த எம்மை அணைக்க
ஆளைத் தேடுறோம்.
காத்துக் காத்து கண்ணும்
பூத்துப் போகுது.
வர்ண வர்ண ஆடையுடுத்தி
தெருவில் நிற்கிறோம்.
வடிவான ஆளு தேட
தோது இல்லே எமக்கு.

SDC14427-001

பொட்டு பவுடர் போட்டு
மினுக்கி நிற்கிறோம்.
இடுப்பில் சேலை வழுவ நின்று
ஆசை மூட்டுறோம்.
தெருவில் போற பசங்க
நிமிர்ந்து பார்த்து குனிந்து போறாங்க.
கண் சிமிட்டி அழைத்தால்
ஓட்டம் போடுறாங்க.

SDC14426-001

வழுக்கை விழுந்த தாத்தா ஒருவர்
நெருங்கி வருகிறார்
பையிலே காசிருந்தால் போதும்
வயிறு நிறையும் எங்களுக்கு.

தெருவோரக் களை என
இழித்து ஒழிக்காதீர்
எமக்கும் ஒரு வாழ்வு வேண்டும்
மறக்காதீர் ஒருபோதும்

எம்.கே.முருகானந்தன்

0.00.0.00.0

மெல்லென விரியும் மெத்தெனும் இதழ்கள்

பதிவின் வடிவம்

DSC04614-001

மழைத்துளியின் முத்தத்தில்
மங்காத சிலிர்ப்பு
மெல்லென தவழ்ந்தெழும்
உதய சூரியனின் புத்துணர்வூட்டல்
இருண்ட வாழ்வின்
மீட்சிக்கான தூரவெளிச்சம்

DSC04619-001

கனவுகள் கற்பனைகளை
ஜனனமாக்கும்
மெல்லென விரியும்
உன் சிங்காரச்
செவ்விதழ்கள்

DSC04620-001

செல்லக் கண்மணியே
உன் பிஞ்சு வாயில்
அரும்புவதற்காய்
காத்திருக்கிறோம்
பல்லுக் கொழுக்கடடை
அவிப்பதற்காக.

DSC04613-001

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0