வடக்கே போகும் ரயில்

பதிவின் வடிவம்

விரைவுப் பயணங்கள்
வடக்கு நோக்கி
ஆராவாரித்து
சென்றன.
வளங்கள் முதல்கள் நாடி
வங்கிகளும் நிறுவனங்களும்
காலடி பரப்பின.

DSC04666-001

வழங்குவர் அனைத்தும்
என நம்பிய
வாடி வதங்கிய மனிதர்,
முகம் மலர
கைநீட்டி வரவேற்று,
ஏமாற்றத்தில்
விழி சோர்ந்தனர்

DSC04664-001N

மீண்டும்
அதிவிரைவுப் பயணங்கள்
புகையிரதமும்
அரசியலாளர்களும்
அள்ளிக் கொடுக்கவா
அள்ளிக் கட்டவா?

DSC04665-001NN

எம்.கே.முருகானந்தன்

0.00.0.00.0

7 responses »

 1. ஐயா… அருமையோ அருமை!

  கட்டிக் காத்துக் காலமெல்லாம்
  பெட்டி பெட்டியாய்க் கொட்டினாலும்
  விட்டுப்போக மனமுண்டோ
  வட்டியும் முதலுமாய் வாங்கும்வரை….

  உணர்த்தும் வரிகள் ஏராளம்!
  படமும் பகருது தாராளம்!

  வாழ்த்துக்கள் ஐயா!

  • ஆம் இளமதி.

   கொள்ளிக் கண் விரித்து
   கள்ளமாயப் பார்த்து நிற்பர்
   காலியான பானையில்
   அடிப் பிடிச்சதையும்
   சுரண்டி அள்ளிப் போகும் வரை.

   கருத்துரைக்கு நன்றி

 2. மீண்டும்
  அதிவிரைவுப் பயணங்கள்
  புகையிரதமும்
  அரசியலாளர்களும்
  அள்ளிக் கொடுக்கவா
  அள்ளிக் கட்டவா?

  இதிலென்ன சந்தேகம்
  நிச்சயம் அள்ளிக் கட்டத்தான்
  மனம் கவர்ந்த கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

 3. நல்ல கவிதை..இன்னும் கொஞ்சம் எதுகை,மோனை சேர்த்து எழுதினால் ,படிக்கும் போது நடை நனறாக இருக்கும்..முயற்சி செய்து பாருங்கள்..

  • உண்மைதான். அவசரமின்றி ஆறுதலாக எழுதினால் நன்றாக வரும்.
   எனது புகைப்படங்களுக்கு பின்னணியாக அல்லது விளக்கமாகவே அவற்றை எழுதுகிறேன்.
   கருத்துரைக்கு நன்றி முருகேசன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s