அறுகரிசி தூவி உசசி மோந்து…

Standard

DSC04660-001

தோளோடு தோள் பிணைய
கையோடு கை கோர்க்க
இடையோடு தொடை நெருங்க
குலவி மகிழும்
இவர்கள்
மறைந்து ஒளிந்து
நிற்பர்.

DSC04677-001

ஒன்றுள் ஒன்றாக
உதடுகள் துளாவ
துடித்துப் பிணைந்து
அளாவிய உறுப்புகள்
சோர்ந்து தளைய
சுடுமூச்சு சிந்தாதீர்
பெருமூச்சாய் மாறிவிடும்
கவனம்

DSC04925-001

காலம் காத்திருக்கிறது
பாதைகளும் பலவுண்டு
வேண்டாத கர்ப்பம்
சுமக்கும் வேதனை வேண்டாம்.
வசந்தத்தைக் காத்திருங்கள்.

SDC12786-001

ஊராரும் உற்றாரும்
உறவினரும் பெற்றாரும்
உளம் நிறைய
அறுகரிசி தூவி
உசசி மோந்து
மங்கலமாய் வாழ்த்தும்
மணமேடைக் காலம்
வந்திடும் விரைவாக
பொறுத்திருங்கள்

எம.கே.முருகானந்தன்

12 responses »

  1. அழகாய் இருக்கிறது
    அவசரம் ஆகாதென்று
    இதமாய் எடுத்துரைத்த
    இனிய கவியும் காட்சியும்
    பதமாய் இருக்குதையா
    பகர்ந்தேன் வாழ்துமக்கே!

    இலைமறை காயாய் இனித்திட இசைத்த
    கவியும் காட்சியும் அருமை ஐயா!
    வாழ்த்துக்கள்!

  2. “காலம் காத்திருக்கிறது
    பாதைகளும் பலவுண்டு
    வேண்டாத கர்ப்பம்
    சுமக்கும் வேதனை வேண்டாம்.
    வசந்தத்தைக் காத்திருங்கள்.”

    ஆழமான கருத்தை
    அழகிய வார்த்தைகளில்
    அருமையாக கவிதை படைத்துவிட்டீர்கள்.

  3. முதலில் மணவறையை காணட்டும் காதல் ,பிறகு கருவறைக்கு வேலைக் கொடுக்கலாம் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் ,அருமை !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s