கழிவகற்றல்

பதிவின் வடிவம்

பொழுது புலரும் நேரமிது
மந்த மாருதும் வீசும்
புள்ளினங்கள் இசை பாடும்
நறுமணம் வீசும் பூக்கள்
என்றெல்லாம்
எண்ண வேண்டாம்

SDC14632-001

கால் பதிக்க ஒண்ணாது
கழிவுகள் வீடுகளிலிருந்து
வீதியோரம் ஒதுங்கிக் கிடக்கும்
கிளர்ந்தெழும் வெடுக்கு
தெரு கடந்து வீடணைந்து
குளர்பதன அறைகளிலும்
நுளைந்து விளையாடும்

SDC14636-002
கொண்டாட்டம் காகங்களுக்கு
பெரு விருந்துகள்
வீதியெங்கும் பரந்து கிடக்கும்
கழிவகற்றும் தொழிலாளர்
தொழில் மறந்தால்
நாளெல்லாம் நகர் நாறும்

DSC01093-001

எம் வீதி எம் நகரம்
என்றிவற்றை
பதனமாய்ப் பேணிடும் மனது
எம்மெவர்க்கு
வரும் நாளெதுவோ?

DSC04676-001

எம்.கே.முருகானந்தன்.

Advertisements

13 responses »

 1. நொந்த மனமுடன்
  வந்த துர் மணத்தினால்
  தந்த உம் கவிதை
  விந்தையில்லை வைத்தியரே!..
  விரைவில் வரிசையில் நிற்பர்
  நோயுடன் உம்மிடமுமே!

  என்று திருந்தும் எங்கள் உறவுகள் உள்ளம்!….

  நல்ல பகிர்வு…நன்றி ஐயா!

  • நன்றி இளமதி

   ஜொலித்திடும்
   ஜோரான பதிவுகளால்
   நாளெல்லாம் இணைய
   வாசகர் மனம் கவரும்
   பொழுதெல்லாம் வளர்மதியாம்
   உங்கள் கவிதையால்
   கருத்திட்டமைக்கு
   நன்றிகள்

 2. எம் வீதி எம் நகரம்
  என்றிவற்றை
  பதனமாய்ப் பேணிடும் மனது
  எம்மெவர்க்கு
  வரும் நாளெதுவோ?/

  /நாகரீகம் என்பது சுத்தமே
  என்னும் எண்ணம் மக்களுக்கு என்று வரும்
  எனும் ஏக்கத்தில் எழுதிய கவிதையும்
  அதற்கான புகைப்படங்களும் அருமை
  அவரவர் அளவில் சூழல் காக்க உறுதி
  பூணவேண்டிய நேரமிது என நினைவூட்டிப்போகும்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

 3. வணக்கம்
  ஐயா
  எம் வீதி எம் நகரம்
  என்றிவற்றை
  பதனமாய்ப் பேணிடும் மனது
  எம்மெவர்க்கு
  வரும் நாளெதுவோ……

  மனஏக்கத்தின் வெளிப்பாடு அருமை கவிதை நன்று படங்களும் நன்று வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 4. அசுத்தத்தின் அவலங்களை அழகாகப் படம் பிடித்து கவிதையும் வடித்துவிட்டீர்கள். கழிவகற்றும் தொழிலாளருக்கு, துப்புறவாளர் காகமும் உதவி செய்கிறது.

  அழகான கடற்கரை, அதில் துள்ளிவிளையாடும் குட்டீஸ்,அருகிலேயே குப்பைமேடு …….கட்டாயம் திருந்த வேண்டும்.

 5. ஐயா, மிகவும் அருமையான கவிதை, நம் வீட்டை வெளியே அசுத்தமாகவும் உள்ளே சுத்தமாகவும், உடம்பை உள்ளே அசுத்தமாகவும் வெளியே சுத்தமாகவும் வைத்து நம்மை நாமே ஏமாற்றிகொல்லிகிறோம்.

 6. “கால் பதிக்க ஒண்ணாது
  கழிவுகள் வீடுகளிலிருந்து
  வீதியோரம் ஒதுங்கிக் கிடக்கும்
  கிளர்ந்தெழும் வெடுக்கு
  தெரு கடந்து வீடணைந்து
  குளர்பதன அறைகளிலும்
  நுளைந்து விளையாடும்”

  படமும் பதிவும் மிக அழகு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s