நாய் உண்ணாத நாயுண்ணி

பதிவின் வடிவம்

நஞ்சென்று விலக்கினாலும்
தீயிட்டுக் கருக்கினாலும்
களையாகப் பரவும்
இது தெருவோரத்தில்
கண்ட நாயுண்ணி

SDC14520 Lantana camara-001

நாய் உண்ணும்
பழம் அல்ல
நாய் உண்ணி போல
கருப்பாக
அசிங்கமாக இருப்பதால்
நாயுண்ணி ஆயிற்று

SDC14524-001

நஞ்சென்று சொல்கிறார்கள்
ஈரலைச் சிதைத்திடுமாம்
இதை உண்ணும் கால்நடைகள்
நோயில் கிடக்குமாம்
‘இதன் பழம் சுவையானது’
விளையாட்டுப் பருவத்தில்
உண்டோம்’
நஞ்சை வென்ற
நண்பர்கள் பலர்
சொன்னார்கள முகப் புத்தகத்தில்.

SDC14520 Lantana camara-001

தெருவோர நாயுண்ணி
பச்சைக் கம்பளத்தில்
காப்பி சிந்தி
களங்கம் உற்றதாய்
நோயுற்ற போதும்
ஒதுங்கி வெதும்பிடாமல்
வண்ணங்களில்
சிரித்தெம்மை
மகிழ்விக்கிறது.

எம்.கே.முருகானந்தன்

0.00.0.00.0

Advertisements

14 responses »

 1. இந்தப்பழம் நஞ்சு என்று நானும் அறியவில்லை. குயில்கள் இது உண்ணும் காலம் மிக அழகானது. அம்மா இந்த நாயுண்ணி செடியை வெட்டி ஆட்டுக்கு எல்லாம் கட்டி தூக்குவா… பாவமே அவை. இந்த சுள்ளி எடுத்து இலகுவாக அடுப்பும் மூட்டலாம்……ம்ம்ம்ம்ம்ம் அருமை ஐயா கவிதை, இந்த படங்களை பார்க்க ஊரின் நினைவுகள் வருகின்றன……..

 2. நாயுண்ணியோ ஐயா..:) அதன் பூ அழகானாலும் தப்பித் தவறித் தொட்டாலுமே நாற்றமடிக்கும் அன்றோ…:)

  நல்லாய்த்தான் சொன்னீர்கள் நல்ல பாட்டு மெட்டிலே.!

  அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

 3. எங்களூரில் (இடைக்காடு) இதைப் பீநாறி (பூநாறி என்பதுதான் சரி என்று தமிழ் வாத்தியார் கூறுவார்). ஆங்கிலத்தில் Lantana என்பார்கள். அவுஸ்திரேலியாவிலும் உண்டு..

  Lantana berries are edible when ripe[7] though like many fruit are mildly poisonous if eaten while still green. (from wiki)

 4. //பச்சைக் கம்பளத்தில்
  காப்பி சிந்தி
  களங்கம் உற்றதாய்
  நோயுற்ற போதும்//

  ஐயா!
  மிக அருமையான ரசனைமிக்க உவமை!, வெகுவாக உங்கள் ரசனையை எண்ணி
  வியந்து மகிழ்ந்தேன்.
  இந்த நாயுண்ணி இங்கு, தெருவோரப் பூண்டல்ல வேலியோரம் நடும் பூமரம். இங்கு
  ஒரு சிறு சாடியில் 15 செ.மீ உயரக் கன்றொன்று 2 யூரோ. நம் நாடுகளின் பல வீதியோர
  ச் செடிகள் இங்கு பூஞ்செடிகள்.
  அடுத்து பூநாறி(பீநாறி) என்பது பெரியமரம், ஆல்,அரசு போல் வளரும் கொக்குவிலில் , காங்கேசன் துறை வீதியில் ,2004லிலும் அந்த மரத்தைக் கண்டேன். சுமார் 1.5 மீட்டர் விட்டம், 15 மீட்டர் உயரமிருக்கும். கொக்குவில் இந்துவுக்கும் நாச்சிமார் கோவிலுக்குமிடையில் தலையாளி போகும் பாதையில் உள்ளது. அந்த பேருந்து நிறுத்தத்தையே பீநாறி மரத்தடி எனவே அழைப்போம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s