பூமி்த்தாயின் கடைசி எச்சம் நீ

பதிவின் வடிவம்

சின்னப் பையன் நீ
மனிதனே
பூமி்த்தாயின்
கடைசி எச்சமாவாய்
அழகின் உச்சம் அவள்
வண்ண வண்ணங்களாய்
பற்பல உயிரினங்கள்
மாமலைபோல் உதித்தன
அவள் வயிற்றில்

SDC14081-001

தாவரங்கள்
பூச்சிகள் ஜந்துகள்
பறவைகள் மிருகங்கள்
கண்ணிற்கும் புலப்படா
அணுத்துளியின்
நுணுக்கம் முதல்
ஆல விருட்சமெனப்
பரவும் எங்கணும்

Lizard shedding skin

கவர்ச்சியான
உயிரியல் மாறுபாட்டின
எழிலான பிரதிபலிப்பு
அவளது மேனி.

SDC13841-001

அவளின் குழந்தைகள்
எவருமே
அவளின் ரம்யத்தை
அழிக்க முனையவில்லை
நீ மட்டுமே
அவளின் மேனியை
மாசுபடுத்துகிறாய்

DSC09147-001

நாளை நீ இல்லாது போகலாம்
ஆயினும் அவள் வாழ்வாள்
வேறு குழந்தைகளுடன்
நிச்சமாக
அழிக்க முனையாதே
அழிவாய் நீயே!

0.0.0

அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

எம்.கே.முருகானந்தன்.

00.0.00

Advertisements

3 responses »

  1. சூழலை மாசுபடுத்துவதையும் இயற்கையை அழிக்கும் எண்ணத்தையும்
    என்று கைவிடுவோம்…

    மிக நல்ல சிந்தனை! அருமை ஐயா!

    தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s