Monthly Archives: ஜனவரி 2014

கூடு செல்லும் வேளை

பதிவின் வடிவம்

மாலை மங்கும் நேரம்
தெருப் பாடகனாய்
நாவுலரக் காலை முதல்
கீதமிசைத்த புள்ளினங்கள்
ஓய்வு தேடி
கூடு செல்லும் வேளை

வேலை ஓய்ந்து வீடு சென்ற
இவனும்
மற்றொரு பணியில்
மீண்டும் பயணம்
கால்நடையில்
குழந்தைக்கு
பிராக்குக் காட்ட
Waters Edge கரை ஓரம்

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Advertisements

பிணியென எண்ணி மாளாதீர்

பதிவின் வடிவம்

எழுந்தால் தலைவலி
சரிந்தால் நெஞ்செரியும்
பேசினால் இளைக்கும்
பெய்தால் சுணைக்கும் மூத்திரம்
உண்டால் வயிற்று ஊதல்

SDC14788-001

கணமும் நிதமும்
நோய் பிணியென
அரட்டாதீர்
சுற்றமும் கழன்று ஓடும்
நட்பும் கலைந்துவிடும்

SDC14784-001
உள்ள நோயல்லாம்
வாய் ஓயாமல்
சொல்லுவர் பலருக்கும்
இல்லை நோய் உடலில்
புழுத்துக் கிடப்பது மனம்தான்

SDC14785-001
வாய்விட்டுச் சிரியுங்கள்
மனம் விட்டுப் பேசுங்கள்
மனிதரை நேசியுங்கள்
அணைக்கக் கை நீட்டுங்கள்
பறந்தோடும் நோயல்லாம்

20131203_081928-001

எனது பேஸ்புக் பக்கத்தில் வெளியான கவிதை

புகைப்படங்கள் :- நோயுற்ற செடிகளும். மீண்டெழுந்த செடியும்

எம்.கே.முருகானந்தன்

00.0.00

அடக்கும் சிறையை உடைக்கும் திமிருடன் அடம்பன்

பதிவின் வடிவம்

கரையெங்கும் கொடி விரித்து
தாய் மண்ணில் வேர் பாய்ச்சி
தடையின்றிப் பரந்தலைந்தவளை
அலங்காரச் சட்டிக்குள்
ஏய்த்துச் சிறையிட்டனர்
எங்கிருந்தோ வந்து
திடலைத் தமதாக்கி
கடைவிரித்தோர்

முடக்கிய தன் வாழ்வை
விலங்குடைத்துத்
தளிர் விரித்து
தரை செழிக்க வேரூன்றி
இனம் பெருக்கி
திமிர் அடக்கத்
திரளும்
காலம் வரும்
விரைந்தே

untitled-001

மற்றொரு பதிவு:- வெளிச்ச வீடும் அடம்பன் கொடியும்

எம்.கே.முருகானந்தன்

0.000.0