அடக்கும் சிறையை உடைக்கும் திமிருடன் அடம்பன்

பதிவின் வடிவம்

கரையெங்கும் கொடி விரித்து
தாய் மண்ணில் வேர் பாய்ச்சி
தடையின்றிப் பரந்தலைந்தவளை
அலங்காரச் சட்டிக்குள்
ஏய்த்துச் சிறையிட்டனர்
எங்கிருந்தோ வந்து
திடலைத் தமதாக்கி
கடைவிரித்தோர்

முடக்கிய தன் வாழ்வை
விலங்குடைத்துத்
தளிர் விரித்து
தரை செழிக்க வேரூன்றி
இனம் பெருக்கி
திமிர் அடக்கத்
திரளும்
காலம் வரும்
விரைந்தே

untitled-001

மற்றொரு பதிவு:- வெளிச்ச வீடும் அடம்பன் கொடியும்

எம்.கே.முருகானந்தன்

0.000.0

Advertisements

11 responses »

 1. அடங்கிடப் போமோ அகண்டே உழுதால்
  முடங்கா முடிச்சாம் திரள்!

  அடம்பன் கொடியும் திரண்டால் முடிச்சு…:)

  கவியும் காட்சியும் கவர்ந்தன ஐயா!

  வாழ்த்துக்கள்!

 2. இதய தாகத்தை கவிதை வடிவில் தந்துள்ளீர்கள். என்றோ ஒருநாள் எம்மினத்திற்கு விடிவு வரும். அதுவரை விடியலுக்காய் காத்திருப்போம். தங்கள் புகைப்படங்களே கவிதை சொல்கின்றன. தொடருங்கள், இனிய வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  குரு அரவிந்தன். (எழுத்தாளர்.)
  கனடா

 3. ஐயா!
  அருமையான படங்கள். அடம்பனும் சாடியில் வந்து விட்டதா?
  இங்கும் , நாம் உதாசீனப்படுத்தும் பல தாவரங்களைச் சாடியில் வளர்கிறார்கள்.
  குறிப்பாகச் சொன்னால் கள்ளியும், கற்றாளையும்.

 4. படத்திற்குக் கவிதை வெகு பொருத்தம். அருமை ஐயா.

  அடம்பன் கொடியின் தாவரவியற் பெயர் தேடுகிறேன். உதவ இயலுமா!

  // அடம்பன் கொடியை வளர்த்ததை இப்பொழுதுதான் கண்டேன்// சிங்கப்பூரில் பொது இடம் ஒன்றில் பெரிய தொட்டியில் வளர்த்திருந்தார்கள். அழகாகப் பூத்திருந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s