Monthly Archives: பிப்ரவரி 2014

கூரிய வாள் ஒக்கும் கண்ணீர்

தரநிலை

தாமேயெனக்
தானும் தன்பாடுமாய்
ஒதுங்கிக் கிடத்தல் பொறுக்காது
யாரிவர்
இங்கெவரும் வாழ்தல் தகாது
நாம் தவிர
வெறியோங்கச் சூழுரைத்து
முறித்துப் பிடுங்கி வேரோடறுத்து
நாதியற வீசின
வன் கரங்கள்

DSC03979-001

இத்தனையாகியும்
இதமாய் மலர்ந்ததாய்
மென்நகை போர்த்தின விழிகள்
செந்நீர் சிந்தவில்லை
எம் இதயங்கள்
என்பது அதன் அர்த்தமல்ல

வேண்டாம்
வருத்தாதே!
வெண் மலர்கள்
சிந்திய கண்ணீர்
கூரிய வாள் ஒக்கும்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Advertisements

விலக்கப்பட்டவன் என்றெண்ணாதீர்…..

தரநிலை

SDC13851

வீசி எறிந்து
விலக்கப்பட்டவன்
என்றெண்ணாதீர்.
சாதித்திமிர் பிடித்து அலையாதீர்
இல்லாதானை சொல்லாலும் இழிக்காதீர்
மேவி மிதித்து துவைக்க முனையாதீர்
சாவுக்கடலில் மூழ்கடிக்க நினைக்காதீர்
தூணிலும் துரும்பிலும்
தெருவோரத் துளி மண்ணிலும்
கட்டாந் தரையிலும்
கழித்தொழித்ததெனத் தீர்த்தபோதிலும்
துளிர்த்தெழும் திட மன  உயிர்கள்.

10220672464_9def690b07

எம்.கே.முருகானந்தன்

மூன்றாம் கண் அல்ல இது மூன்றாம் முலை

தரநிலை

மூன்றாவது கண் இருக்கிறதாம்
முற்றும் அறியும் ஞானக் கண்ணாம்
எல்லாம் வல்ல சிவனின் ஞான விழியாம்
என்றெல்லாம் எம் மரபு சொல்லும்

20140221_090504_Richtone(HDR)-001

இருந்தாலும்
மூன்றாம் கையைக் கண்டதில்லை
மூன்றாம் காலும்
மூன்றாம் விதையும் அறிந்ததில்லை
மூன்றாம் காதிருந்தால்
முனகும் இரகசியமும்
சீராய்க் கேட்குமோ

20140221_090504_Richtone(HDR)-002
இவருக்குள்ளது மூன்றாம் முலை
இதென்ன அதிசயம் என்றெண்ணாதீர்
பதினெட்டு ஆண்களில் ஒருவருக்கும்
ஐம்பது பெண்களில் ஒருவருக்கும்
இருக்குமாம் இவ்வாறு
ஆய்வுகள் அவ்வாறு சொல்கின்றன
கண்டு கொள்ளவதில்லை நாம் அவ்வளவே

20140221_090504_Richtone(HDR)-003

முலை இதுவெனப் படம் பிடித்துச் சொன்னதும்
விழி பிதுங்க பார்த்தார்
அதிசயமோ ஆபத்து ஏதும் ஆகுமோ
பயம் பிடித்தது அவரை
இல்லை கட்டியாகாது
புற்று நோயும் வருவதில்லை
சட்டையின்றி திரிந்தால்
மற்றவர் இழிப்பாரோ என்ற
வெட்கம் வரக் கூடும்
அவ்வளவே

20140221_090457_Richtone(HDR)-002

supernumerary nipple
third nipple, triple nipple,
accessory nipple, polythelia
என்றெல்லாம் மருத்துவத்தில் பெயருண்டு

எம்.கே.முருகானந்தன்

0.00.0

நான்கு கதவுகள் வீட்டின் ஒரு நிலையில்..

தரநிலை

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு
இரட்டைத் தாழ்ப்பாள் என்பார்கள்
இரண்டு அடுக்குக் கதவிற்கு எப்படி
தாழ்ப்பாள் போடுவார்கள்?

அரசர்கள் தங்கள் கோட்டைகளுக்கு
இரட்டைக் கதவுகள் போடுவதுண்டு
எதிரிகளிலிருந்து பாதுகாப்பிற்காக
இப்பொழுது கொழும்பில்
பல தொடர்மாடி வீடுகளில்
மரக் கதவிற்கு வெளியே
இரும்புக் கிறாதி கதவுகள்
திருடர்களின் கைவரிசையிலிருந்து தப்பிக்க
காற்றோட்டத்திற்காக எனவும் சொல்வார்கள்

இது நூற்றாண்டு பழமையான வீடு
மரக் கதவிற்கு உள்ளே
கண்ணாடியால் மூடப்பட்ட கதவு.
ஒரே நிலையில்
நான்கு கதவுகள் உள்ள வீட்டு வாசல்?
எதற்காகப் போட்டிருப்பார்கள்?
அலங்காரமாகத்தான் இருக்கிறது

இது கிராமப்புறத்து வீடல்ல
கொழும்பில் மத்தியில் கண்ட வீடு

0.0.0.0.