Monthly Archives: மார்ச் 2014

மூதாதையர் பாதையில் பயணித்தால் ஆஸ்த்மாவும்…..

பதிவின் வடிவம்

புகைத்தல் கூடாது
ஆஸ்த்மா கிளர்ந்தெழுமாம்.
படுக்கைத் தூசியும்
நுளம்புத் திரியும் அத்தரும்
சிலருக்கு ஆகாதாம்.
அழுக்குத் தலையணையும்
கூடவே கூடாதாம்

அடுப்பில் விறகிட்டுச் சமைத்தால்
நச்சு வாயுக்களும் நுண்துகள்களும்
புகையுடன் கூடிவரும்
ஆஸ்த்மா கிளர்ந்தெழும்
WHO
எச்சரிக்கிறது

காஸ் விக்கிற விலையில்
சமையலே வேண்டாம்
என்கிறது பர்ஸ்.
மின்னடுப்பு பில்
எகிறுகிறது
செத்துத் தொலைத்தால்
சமையலும் இல்லை
பில்லே வராது.

வழியேயில்லை
விறகே தஞ்சம்
முற்றத்தில் அடுப்பு வைத்தால்
காற்றோட்டம் இருக்கும்
புகை விலகி ஓடும்
ஆஸ்த்மாவும்
புற்றுநோயும
புறமுதுகிட்டு ஓடும்
அதுவும் WHO கூற்றுத்தான்

மீண்டும் பயணிப்போம்
மூதாதையர் பாதையில்

எம்.கே.முருகானந்தன்.

00.0.00

முற்றத்தில் சோறாக்கி தெருக்குழாயில் உடல்கழுவி..

பதிவின் வடிவம்

முற்றத்தில் சோறாக்கி
தெருக்குழாயில் உடல்கழுவி
மண்தரையில் படுத்தெழும்பி
கலவியில் கூடவும்
மறைவிடம் கிட்டாத
ஆற்றாத சோகத்தில்
வாழுமிவர்
உடலுழைப்பில்
சொகுசாக ……

DSC01098-001


மறுபுறத்து மாடியில்
உடுத்தும் படுத்தும்
குடித்தும் கூடியும்
களித்து காமுகித்தும்
காசைக் கரியாக்கும்
கனவான்கள்
கனவாட்டிகள்…

DSC01088-001

குளிரும் வெப்பமும்
சீற்றத்துடன் உள்நுழையும்
சுவரும் கூரையும்
தகரமான சிறுகுடிலதில்
கரைந்தழியும்
இவர் வாழ்வு
ஆனான உணவின்றி.

DSC01099-001

“இவையெல்லாம்
எப்பவோ முடிந்த காரியம்
முந்தை வினைப் பயன்
எந்தை அடிசேர்ந்தால்
இன்னல் அறும் முத்தி கைகூடும்”
விந்தை பேசாதீர்
இன்றிவர் வாழ வழி சொல்லும்

உழைப்பவர் வாழ்வு
உயர்ந்திங்கு அரசோச்சும்
சமதர்ம சமுதாயம்
மலர்விக்கும் புதிய தளம் பண்பாடு
விதைத்திடுவீர்

எம்.கே.முருகானந்தன்

0.00.0

காத்திருப்பு

பதிவின் வடிவம்

DSC01098-001

அலை தீண்ட மணல் ஒளிரும்
நெடுநீலக் கரைமுதல்
வான் நெருங்க வளர்ந்தோங்கும்
நகர்கோலம் அடங்குவரை
கொழும்பெங்கும் உலாவாக
படகுக் காத்திருப்பு

SDC14545-001

குடலெழுந்து நா கடந்து
சத்தி வெளியாகும்
கழிவோடை பெருநாற்றம்
பொறுத்தபடி
சிறகு மடித்து
காலூன்றிக்
காத்திருக்கும் கொக்கு

SDC14804-0011

காத்திருப்பு தொடர்ந்திருக்கும்
மலர்பெருகி
நீர் ஒழியும்  தாமரை தடாகங்களிலும்
பசும் ஆடை மேவிய குன்றுகளிலும்
பொசுத்தெரிக்கும் வெயிலிலும்
பனிசொரியும் கூதலிலும்
பொறுமையைப் பாடமாக
கற்றுத் தந்தபடி

SDC13841-001

எம்.கே.முருகானந்தன்

0.00.0

கொட்டடிப் பிள்ளையார் தெப்பக் குளம்

பதிவின் வடிவம்

கொட்டடிப் பிள்ளையார்
கோவில் தெப்பக் குளம்
தூசி மண்டி
பாசி படர்ந்து
சோகமாய் நின்றது
சிலநாள் முன்

DSC05885-001
பள்ளிச் சிறுவனாய்
ஹாட்லியில்
திரிந்த காலத்தில்
குளத்தின் அருகில்
ஐயர் வீட்டு
மதியச் சோறு

DSC05887-001

குளத்தின்
நிர்மல நீரில்
நிழல்கள் தவளும்
அழகுத் தோற்றம்
நினைவுகளில் நிறைய
உள்ளம் பாசியில் சிக்கி
மூழ்கித் திணறுகிறது
ஏக்கத்தில்
DSC05886-001

இன்று மாறியிருக்கும்
பார்க் கக் கிடைக்கவில்லை

எம்.கே.முருகானந்தன்

0.00.0.00.0

காலிமுகக் கடற்கரையில் மாலை உலா Galle Face Green and Galle Face Hotel

பதிவின் வடிவம்

ஓய்ச்சல் ஓய்வின்றி
பரபரக்கும் மாநகரின் மத்தி

SDC12936-001
நுரைபொங்க அலையடிக்கும் கடல்
நெடுதூரம் ஓயாது பயணித்து
அடிவானை வாஞ்சையுடன்
அரவணைக்கும்.

Photo1182-001

BOC and Twin towers in Colombu

மிதக்கும் பொம்மைகளென
கப்பல்கள் ஆங்காகங்கே பொருள் சுமந்து
துறைமுகம் நாடும்.

SDC12933-001

கரையோரம் அரைக் கிலோ நீளத்தில்
பச்சைக் கம்பள பரவிய மெருகோடு
கடற்கரை மைதானம்
காலிமுகக் கடற்கரை என்பார்கள்.

வீதி கடந்தால் மறுபுறத்தே
பழைய பாராளுமன்றக் கட்டடம்.
பிரிட்டிஸ் அரசின் சட்டவாக்க மன்றின்
எச்சமாக

Photo1184

Neo Barogue style building Sir Henry Mccallam
ஆலோசனையில் அமைக்கபட்டது
நாலரை இலட்சம் செலவில்
மட்டும் அந்நாளில் கட்டப்பட்டது.

Photo1169-001

Galle face court and Galle face Hotel

திறந்தது கவர்னர் சேர் ஹெர்பட் ஸ்டான்லி அவர்களால்
ஜனவரி 29இ 1930 திறந்து வைக்கப்பட்டது.
இன்று ஜனதிபதி செயலகமாக…

Photo1170-001

உல்லாசம் தேடும் வெளிநாட்டார்
மற்றும் பணம் செழித்தோர் தினம் நாடும்
நட்சத்திர ஹோட்டேல்.
1984ல் நான்கு பிரிட்டிஷ்
தொழிலதிபர்களால் கட்டப்பட்டது.

Photo1176-001

அதற்கு முன்னர்
Galle Face House என்ற பெயருடைய
டச்சுக்காரரின் விலாவாக இருந்தது.

SDC12891-001

காலிமுக ஹோட்டல்

கைகோத்துக் குதுர்கலிக்கும் காதலர்கள்
பெஞ்சுகளில் அமர்ந்திருந்து
குனித்து மறைவாக முத்தமும் கொடுப்பர்

SDC12948-001

பட்டங்கள் ஏற்றி நீல வானத்திற்கு
வண்ணம் பல கொடுப்பர்.

Photo1173

பந்தடித்தும் விளையாடுவர்.
களைத்தால் குடிப்பதற்கு
ஜீசுகள் கிடைக்கும்
ஐஸ்கிறீமிற்கு பஞ்சமில்லை
சுத்த சுகாதாரம் பார்க்கக் கூடாது

SDC12917-001

வீதியோரம் பனை மரங்கள் அலங்கரிக்கும்
ஆங்காங்கே தென்னைகளும்
குலை தள்ளும்

SDC12943-001

இருந்தாலும் வெயிலிற்குக் குறைவில்லை
நிழல் தேடி அலைந்தாலும் ஓரிடமும் கிடையாது
மாலை மங்கு நேரமே வாக்கிங்கிற்கு உகந்த நேரம்.

Galle Face Green and Hotel

0.0.0.0.0

சலிப்பற்றது சிலந்திப் பூச்சி

பதிவின் வடிவம்

சலிப்பற்றது
அதன் இயக்கம்
ஒய்வு ஒழிச்சல்
தீண்டியதே இல்லை

DSC04615-001

இலக்கை நோக்கிய
திட நெடும் பயணமதில்
தயக்கம் சோர்வு சலிப்பு
அண்டியதேயில்லை

DSC04617-001

தளிர் இலை நுனிகளில்
நுண் வலை பின்னி
கரந்திருக்கும்
இரை கவரும்
தடை  தகர்த்து
தன் வாழ்வுயர்த்த
தயங்காது
சின்னம் சிறு ஜந்து
என்ற போதிலும்
சிலந்தி.

DSC01695-001

இவர் தரையில் தவழுகிறார்

எம்.கே.முருகானந்தன்

0.00.0