காத்திருப்பு

Standard

DSC01098-001

அலை தீண்ட மணல் ஒளிரும்
நெடுநீலக் கரைமுதல்
வான் நெருங்க வளர்ந்தோங்கும்
நகர்கோலம் அடங்குவரை
கொழும்பெங்கும் உலாவாக
படகுக் காத்திருப்பு

SDC14545-001

குடலெழுந்து நா கடந்து
சத்தி வெளியாகும்
கழிவோடை பெருநாற்றம்
பொறுத்தபடி
சிறகு மடித்து
காலூன்றிக்
காத்திருக்கும் கொக்கு

SDC14804-0011

காத்திருப்பு தொடர்ந்திருக்கும்
மலர்பெருகி
நீர் ஒழியும்  தாமரை தடாகங்களிலும்
பசும் ஆடை மேவிய குன்றுகளிலும்
பொசுத்தெரிக்கும் வெயிலிலும்
பனிசொரியும் கூதலிலும்
பொறுமையைப் பாடமாக
கற்றுத் தந்தபடி

SDC13841-001

எம்.கே.முருகானந்தன்

0.00.0

2 responses »

  1. நன்மை கருதி பொறுமையுடன் காத்திருப்பதில் கை மேல் பலன் வருமோ?
    கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் எனக் காத்திருந்தே
    உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு என்னும் நிலையும் உண்டே.

    • நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது.
      நன்மை வரும் என முயற்சி செய்யாது வாழாதிருப்பது வீண்தான்.
      ஆனால் கொக்கின் முயற்சியே காத்திருப்பதாகவும் எண்ணத் தோன்றுகிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s