ஓவென ஒப்பாரியாக மேலெழும் ஓசை…

பதிவின் வடிவம்

காதில் விழுகிறதா அந்த ஓசை?
ஓவென ஒப்பாரியாக
மேலெழுந்து
வீணையின் நாதமாக
கசிந்துருக்கும்.
காற்றினில் ஜனித்த பாடல்
நெஞ்சுருக்கும் கீதமாக….


காற்றின் திசையோடு
இசைந்தாடும் லாகவம்
பெண்ணங்கின் நளின
நடையழகை எள்ளலுடன்
நாணவைக்கும்.

SDC14971-001

அடிவேரில் அலை தழுவ
உவர் நீரைச் சுவைத்துறிஞ்சி
நடனமாடும் பூவுலகத் தேவதைகள்
தம் சிரசில் பரிமாறும் இளங் கனிகள்
கதிரெரிக்கும் வேளைதனில்
வெக்கை தணிக்கும்.

Photo1130-001

இது போதாது
இன்னும் இன்னும்
வேணும் குளிர்மையென
பேராசை பிடித்து
பாளைசீவி வடித்தெடுத்து
மிதமருந்தும் பானம்
அம்மணமாய் அவர் ஈனம்
பறைசாற்றும் ஊரெங்கும்
அவர் மனைவி ஊர்தெருவில்
தலைகாட்ட வழியின்றி
பின்சாரில் ஒழிந்திருப்பாள்.

SDC14140-003

குடலெரியும்
கரைந்தழுகும் அவர் ஈரல்
பெரு வயிற்றில் நீர் சுரக்கும்
பொத்தையாகக் கால் வீங்கும்
படுக்கைப் பாயிலும்
கிடக்கவொண்ணாது
மேல்கீழாய மூச்செறியும்
அவர் வாழ்வு
அவ்வளவுதான்
பாடைக்கு மரம் தறிக்கும்
வேளையாயிடும்.

Cellulitis 9-001

இப்போதும் கேட்கிறதா?
காது கொடுத்துக் கேள்
மூட மனிதா….
ஓலையசைத்துக்
ஏக்கமுடன் எழுப்பும்
குரலோசை
ஓவென ஒப்பாரியாக……!!!

எம்.கே.முருகானந்தன்

…………….

Advertisements

6 responses »

  1. குடியின் தீமையை அழுத்தமாக கூறிவிட்டது ஐயா கவிதை. தொடங்கும்போதும் படங்களை காணும்போதும் பிற்பகுதியில் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை அறியாமலிருந்தும் லேசான அச்சம் மனத்தைக் கவ்விக் கொள்ள அற்புதம் ஐயா

  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    http://www.Nikandu.com
    நிகண்டு.காம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s