Monthly Archives: மே 2014

பொட்டிட்டதும் பொட்டு இடப்பட்டதும்

பதிவின் வடிவம்

ஞாபகம் வரவில்லையா

அரையிருந்து நிக்கர் வழுகி விழ

அம்மணம் மலர்வதின்

அலங்கோலம் புரிதலின்றி

விரைந்தோடி நான்முந்தி

நீ முந்தியெனப் பிடுங்கலுற்று

SDC14039-001

தெருவோர புல் பிடுங்கி

உன் நெற்றியில் நானும்

என் நெட்டியில் நீயும்

பொட்டிட்டு

வெடியடித்து மகிழ்ந்தனை?

நினைவழித்தல் சாத்தியமா?

நீயே சொல்!

புல் அரும்பாப்
பனி வனங்களில் அலைந்தில்
உன் உளம்
கரும் பாறையாய்
உறைந்து இறுகியதோ?

DSC01822-001
வெண் மணலில் வெந்துலையும்
இவன் உள்ளம் சன்னப் பொட்டு
நெற்றியில் இடப்பட்டவனாய்
சிதைந்து கிடந்தபோதும்
உருகவில்லையா?
“அரையிருந்து நிக்கர் வழுகி விழ…. ”
ஞாபகம் வரவில்லையா
இன்னும்

எம்.கே.முருகானந்தன்

0.00.0

நிஜமும் நிழலும்

பதிவின் வடிவம்

மாநகரின் எழில் பெருக்கும் கலையழகு

மருத்துவரும் மாண்புடை அதிகாரிகள்

மனம் நிறைய வாழுமிடம்

வாசல் காக்க காவலாளர்

கழிவகற்ற வேலையாளர்.

இதம் தரும் வாழ்வு என்றிருந்தர்

மழை ஓய்ந்த நாளொன்றில்

காலாறிக் காற்றில் நீராட

லிப்ற் ஏறி

மாடி வீட்டு மொட்டை மாடி

உச்சி புகுந்தால்

பெருவெள்ளம் பரந்திருக்கு

அருகணைந்து விழி விரித்தால்

விளைந்திருக்கு பலகோடி உயிர்கள்

அவை பறந்து உயிர் வாழ

குருதியுணவு தேடும் வேளை

மானிடர் பலர் பரலோகம் சேர்ந்திடுதிடுவர்

ஆம்!!

இது

டெங்கு விளையும் பூமியடா

எம்.கே.முருகானந்தன்.

 

0.00.0

துருப்பிடித்த வாழ்வு

பதிவின் வடிவம்

துருப்பிடித்தல்
இரும்புகளின் இயல்பு
ஒட்சி ஏற்றம் ஆவதால்…

செம்புள்ளிகளாய்
அரும்பும்
அக்கறையீனத்தால்
சிக்காராய் பற்றிச்
சத்தமின்றிப் பரவும்
ஒட்டுமொத்தமாய்
அழித்தொழிக்காமல் ஓயாது

SDC14147-001

இழிவுற்று சொரசொரத்து
உச்சி முதல்
எச்சமின்றி
மேனியெங்கும் பிணி மூள
நலிந்து நலங் கெட்டு
கறள் துகளாய் உதிர்ந்து
மண்ணோடு மண்ணாவது
உறுதி

இருந்தாலும்
தூற்றிக் கருவறுத்து
நாணவைக்கும் பேச்சுரைத்து
வாய்மொழி மீறி
மனங் கெட்டு 
வாழ்ந்தும் வாழாதிருப்பது
துருப்பிடித்து அழிதல்தானே.

எம்.கே.முருகானந்தன்

தூசி படிந்த வெண்மலர்

பதிவின் வடிவம்

தூசி படிந்த வெண்மலர்
மாசு கழுவி தூய்மையாக
சிறுமழை போதும்
மனசின்
மாசு கழுவ
எது உதவும்

0.0.0.0

எம்.கே.முருகானந்தன்

அந்தி சாயும் வேளை காலிமுகத் திடலில்

பதிவின் வடிவம்

அந்தி சாயும் வேளை
அரை இருள் கவ்வும் நேரம்

20140406_181524_Richtone(HDR)-001
கருக்கல் மூடும் முன்னே
இந்துமா கடல் ஓரம்
காலி முகத் திடலில்
சனத் திரள் மோதும்.

20140406_181657_Richtone(HDR)-001

வானம் வெந்து சிவக்கும்
ஆதவன் மூழ்கி ஒளிவான்

20140406_182550_LLS-001
நீலக்கடல்
கருமை போர்த்திக் கொள்ளும்
அலை ஓசையெழுப்பி
தன் இருப்பை பறைசாற்றும்.

20140406_182541_LLS-001
தள்ளு வண்டிகளில்
விரித்த கடையிருந்து
சுடச் சுடச் வாசனை மூக்கைக் கிளறும்

20140406_183329_LLS-001

கடலை முறுக்கு
மீன் பொரியல்
அவித்த சோளம்
வாய் நிறைய காசுப்பை
காலியாகும்

20140406_182614_LLS-002

குவளைகள் காலியாக
இதழ் பிரியாது
மென்று முழுங்குவர்
இதழ் பிரித்து முத்தங்கள்
சிந்துவர்
எதிர்புறக் ஹோட்டல்களில்
பெரு முதலைகள்

20140406_182118_Richtone(HDR)-001

மாருதம் தழுவி வீசும்
எழில் மேனிகள் சிலிர்த்தெழும்
உள்ளம் பொங்கி வழியும்

எம்.கே.முருகானந்தன்

0.0.0