Monthly Archives: செப்ரெம்பர் 2014

உறுதி

பதிவின் வடிவம்

20140810_164414_Richtone(HDR)-001

ஆழத் தடம் பதித்தனர்
ஆழி தழுவி மாசகன்ற
வெண் மணற்
பெருவெளியில்
நண்டுகளும் குழந்தைகளும்

20140810_164811_Richtone(HDR)-001

 

 

ஊழிக் கரமென சினந்தெழுந்த
பெரும் அலைகளில்
கரைந்து போயின
விளையாட்டுத் தடங்கள்
உறைந்து ஒழிந்து
மீண்டு உயிர்த்தன
ஓயாத உழைப்பில்
உறுதியாய் சமைத்த
நண்டின் வளைகள்

20140810_164745_Richtone(HDR)-002

 

எம்.கே.முருகானந்தன்

0.***.0

தப்பினீர் தற்கொலை வேண்டாமென

பதிவின் வடிவம்
தற்கொலை நாட்டம் கொண்டீரோ
தவறது எனக் கைவிட்ட பின்னும்
நுதல்  சுருங்கத் தலை குனிந்து
சோர்வுடன் நடக்கின்றீர்
ஏன் இன்னமும் அப்படி ?
SDC14549-001
காதலா, கத்திரிக்காயா
கை நழுவியதா தொழில்?
கணவன் சிண்டைப் பிடித்தானா?
தண்ணி அடிக்கும் பையனா?
பக்கத்து வீட்டாள் பார் அதிரத்
திட்டித் தீர்க்கிறாளா?
எதுவானாலும் கலங்காதீர்!
சிந்தனைத் தெளிவும்
திடமான மனமும்
தன்னம்பிக்கையும்
இருந்தால் தரணி ஆளலாம்
தலை நிமிர்ந்து வாரும்.
வாழ்வு சுவைக்கும்.
SDC14550-001
சற்றுத் தலை நிமிர்ந்து பார்க்கின்றீர்
நன்று
பரபரவென தகித்தோடும்
உலகில் கலந்தோடுங்கள்
பொழுதிருக்காது சிந்திக்க
தற்கொலை பற்றி
எம்.கே.முருகானந்தன்.
0.0.0

வெட்டுதல் குரூரமானது

பதிவின் வடிவம்

வெட்டுதல் குரூரமானது
கத்தியால்
மாந்தரை விலங்குகளை
மரங்களையும்தான்

SDC15255-001
வார்த்தைகளால்
வெட்டிக் குதறி எடுப்பது
அதைவிட வேதனையானது.

எம்.கே.முருகானந்தன்

0.0.0