Monthly Archives: மார்ச் 2015

முறிகண்டியில் மூத்திரம் கழித்தல் …..

தரநிலை

20150305_025835-001

முறிகண்டியில்
தூக்கம் கலைந்த வேளை
மூத்திரம் கழிக்கச் சென்றால்
மூக்கைப் பொத்தி
மூச்சையடக்கி
முக்தியடைய வைக்கும்
கழிவு நாற்றம்

கால் கழுவினேன்
கோவில் புக அல்ல
சேறிலும கேடாய் நாறும்
கழிப்பறை அசுத்தம்
செருப்பினின்று நீங்க

கோவில் அமோகம்
கும்பிடுவோர் ஏராளம்
மன மாசு நீங்கி
மகிழ்வுடன் நீடு வாழ

20150305_030005-001

வீதி அருகில்
காசுக் கழிப்பறை
நோயினை விதைத்து
முக்தியை
விரைந்து அழைக்க

எங்கு மறைந்தனர்
உள்ளுர் ஆட்சி சபைiபினர்
சுகாதாரப் பரிசோதகர்கள்
மற்றும் அதிகாரிகள்
மணத்தினில் மாய்ந்து மறைந்தனரோ

கேடு கெட்ட இடத்தில் புக
தெண்டம்
பத்து ரூபாய் வேறு

வாங்குவதில் குற்றமில்லை
மேலும் கேட்டாலும் தப்பில்லை

20150305_030012-001

சுத்தம் பேணினால்
நாமும் நலமடைவோம்
நாடி வரும் புற மாந்தரும்
கேவலமாய் நோக்கமாட்டார்
நம் இனத்தை

எம்.கே.முருகானந்தன்

0.00.0

 

வயசு பேதமின்றி வாய் பொத்தி மெய்யடங்கல்

தரநிலை

அகலக் கை விரித்து
அகிலம் முழுமையாய்
கையடக்கும்
குறுகி வந்து
குஞ்சு குமர் முதல்
கிழங்கள்  வரை
பேதமின்றி
வாய் பொத்தி
மெய்யடங்க
மலங்கச் செய்யும்

20150301_064420_Richtone(HDR)

அறிவியலையும்
சுவை குன்றாக் கலைகளையும்
இன்னும் இன்னும்
நற்தகவல்களையும்
அள்ளித் தரும்
அதே நேரம்
அசட்டு நிகழ்ச்சிகளால்
நாறவும் செய்கிறது
தேர்தெடுப்பது நம் கடன்

எம்.கே.முருகானந்தன்

0.00.0