வெம்பிக் கிடந்த
வானம்
நீலப் பட்டாடை சூடியது
வெண் மாலைகள்
போர்த்தின
மஞ்சுகள்
முழுகித் தோய்ந்த
இலைகள்
ஒட்டிக் கிடந்த
நீர்த் துவளைகளை
ஓங்கி வீசும்
வாடையில்
சிலிர்த்து உதறின.
தயங்கி எழுந்த
ஆதவக் கதிர்களில்
உலரப் போட்டன
விருட்சங்கள்
போர்வையில்
முடஙகிக் கிடந்த
மாந்தர்கள்
சோர்வு நீங்கி
சுறுசுறுப்பாய் இயங்க
முனைந்தனர்.
கொட்டிய மழை
அடங்கிய
விடியலில்.
எம்.கே.முருகானந்தன்
0.0.0
Advertisements