கொல்லப்பட்ட மாந்தரும் தப்பிய நாய்களும்

Standard

12799407_10156599624205268_5316999257291295311_n

தெருவோரம் இவர் போல
பலருண்டு
கிடைத்திடுமா தின்ன
ஏதேனும் என
நகர் நீளம்
தினந்தோறும்
அலைந்திடுவார்.

பசி மிகுந்து உருவேற
மதி கலங்கும்.
அசண்டையாய்
அலைவோரின்
கால்களை பதம் பார்ப்பார்
பாவம்!
கடியுண்டோர் பாடு

கடியுண்டது போதாதென
விசர் நாய்க் கடி
தடுப்பூசி ஆறும்
ஏற்புத் தடை ஊசியும்
ஏற்றும் வலியும்
கிடைக்கும் போனசாக.

தெரு நாய்கள் போல
மனிதர்களை
போரில் கொன்றவர்கள்
தெரு நாய்களை கொல்வது பாபமென
கபடத் தடைப் செய்த
புதுமை இந்த நாட்டில்
மட்டும்தான்

செவிடன் காதில் ஊதிய
சங்காயிற்று
மதங்கள் போதித்த
கொல்லாமை

எம்.கே.முருகானந்தன்

2 responses »

  1. ஐயா உங்கள் கவிதையில் மனிதனுக்கு மட்டும் நியாயம் தேடுகின்றீர்கள். அண்மைமையில் நான் கடை வீதியில் செல்லும்போது கடை வீதியில் ஒருவன் கோழிகள் பறக்காதிருக்கட்டும் என்பதற்காக அதன் இறக்கைகள் இரண்டையும் வெட்டி விட்டு வைக்கிறான். அவை மரண வழியில் துடிக்கின்றன. மனிதன் நாளாந்தம் செய்யும் பாவங்கள் இலங்கையில் இன்று பொதுமை அடைந்திருக்கின்றது அப்படி உள்ள நிலையில் நாயையாவது விட்டு வைத்தானே என ஆறுதல் அடைவோம்!

    • நன்றி உங்கள் கருத்துரைக்கு
      மிருகங்களுக்கு எதிராக நான் சொல்ல முன்வரவில்லை
      முன்னைய ஆட்சியாளரின் கபடத்தனத்தை வெளிப்டுத்துவதோடு
      விசர் நாய் கடியால் ஏற்படக் கூடிய ஆபத்தை விளக்குவதற்காகவும் எழுதிய
      படைப்பு அது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s