Monthly Archives: ஓகஸ்ட் 2016

நாங்கள் எறும்புகள் ஊர்வலம் போகிறோம்

தரநிலை

நாங்கள் எறும்புகள்
ஊர்வலம் போகிறோம்
ஒருவர் பின் ஒருவராக
தீயதை ஒழிக்க
தீயவனை அழிக்க …

வணக்கத்திற்குரிய
அர்ச்சனை செடியும்
நோய் தீர்க்கும் மூலிகையுமான
துளசிச் செடியில்
பீடையாய் பற்றிய
பங்கஸ் நோயினை அழிக்க.

பெரும் திரளாக குவிந்து
ஊர்வலம் போகிறோம்
தீயதை ஒழிக்க
தீயவனை அழிக்க.

எம்கே.முருகானந்தன்

0.00.0

Advertisements