கொக்கைத் தடி (කෙක්ක:)

பதிவின் வடிவம்

கொக்கைத் தடி (කෙක්ක:)

எல்லாமும் எல்லோரும் தான் காலத்திற்கு ஏற்ப கோலம் மாறுகின்றன(ர்)

இவர் மட்டும் மாறமாட்டாரா?

அந்த நாளில் நாங்கள் மாங்காய் பிடுங்கவும் ஆட்டிற்டு குழை முறிக்கவும் முருங்கைக்காய் பறிக்கவும் கொக்கைத்தடியை பயன்படுத்துவோம்.

இன்றும் தான் பயன் படுத்துகிறோம். ஆனால் இன்று கொக்கைத்தடியார் நவீன் மோஸ்தரில் இருக்கிறார்.

நீண்ட நேரான நேர்த்தியான பூவரசம் தடியாகத் தேர்ந்தெடுத்து அதன் நுனியில் ஒரு சிறிய தடியை சாய்வாகக் கட்டினால் நல்ல கொளுவியாக அமையும்.

கொக்கைத்தடி தயாராகிவிடும்.

பூவரசம் தடிக்குப் பதிலாக கிளிசரியா தடியானால் பாரம் குறைவாக இருக்கும்.

கொளுவியாகவும் அதே நேரம் வெட்டவும் வேண்டுமானால் தடிக்குப் பதிலாக சத்தகக் கத்தியை கட்டுவோம்.

இன்று வேலிகளுக்கு பதிலாக மதில்கள் முளைத்து வருவதால் நீண்ட தடிகள் கிடைப்பது அரிதாகி வருகிறது.

இதன் காரணமாக தடிகளின் இடத்தை எஸ்லோன் பைப்புகள் பிடிக்கின்றன.

கொளுக்கி தடிகளுக்கு பதிலாக சிறிய இரும்பு கம்பிகளை பயன்படுத்துகிறார்கள்.

மரங்களும் மரங்களில் காய் கனிகளும் இருக்கும் வரை கொக்கைத் தடியின் தேவை இருக்கத்தானே செய்யும்.

கொக்கைத்தடி சிங்களதில் கொக்கா என்பார்கள். தமிழகத்தில் தொரட்டுக் கம்பு என்றழைப்பார்களாம்

ஆங்கிலத்தில் என்ன பெயர் சொல்லுங்களேன்.

ஒரு மறுமொழி »

Dr.M.K.Muruganandan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி