நான் டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

 • நான் மருத்துவம் என்ற கூட்டிற்குள் நிறைவாக வாழும் ஒரு குட்டிக் குருவி.
 • 63 வயதிலும் 26 வயதினனான உணர்வுதான். மருத்துவத்திற்கு வெளியாகவும் எப்பொழுதும் எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அந்த அவா என்றுமே தீர்ந்ததில்லை.
 • இலக்கியம், சினிமா, நாடகம், சிற்பம், புகைப்படம் எனப் பல திசைகளில் பயணித்தாலும் எனது கூட்டிற்கே திரும்பி விடுகிறேன்.
 • இவை யாவற்றில் கிடைக்கும் அனுபவங்களை மகிழ்ச்சியோடு அசை போடுகிறேன்.
 • அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் சுகம் அலாதியானது.

அச்சு ஊடகம், ரேடியோ, ரீவி, இணையம் எனப் பரந்து பகிர்ந்த நான் இப்பொழுது என்னை அச்சு மற்றும் இணைய வலைக்குள் ஒடுக்கிவிட்டதால் கிட்டியது நிரம்பிய நிம்மதி.

வட இலங்கையான யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வியாபாரிமூலையில் பிறந்த நான் கடந்த 12 வருடங்களாக கொழும்பு வாசி.

கல்வி

எனது கல்விக்கு வழிகாட்டியவை

 • ஆரம்பப் பாடசாலை மேலைப் புலோலி சைவபாலிகா பாடசாலை, வியாபரிமூலை
 • மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலை, வியாபரிமூலை
 • ஹாட்லிக் கல்லூரி, பருத்தித்துறை
 • மருத்துவபீடம், இலங்கை பல்கலைக்கழகம் கொழும்பு வளாகம் 1970-1975 M.B.B.S (Cey)
 • பட்டமேற் படிப்புDiploma in Family Medicine (Colombo)

பணிகள்

அரச பணி

 1. General Hospital Badulla
 2. Peripheral Unit Megahakulla
 3. Base Hospital Point Pedro April 1978 April 1980

தனியார் துறை

 1. மருதடி பருத்தி;துறை, May 1980- Dec 1997, (2005-2006)
 2. 348348, Galle Road, Wellawatte (1998- 2005)ஆகிய இடங்களில் குடும்ப மருத்துவனாக தனியாக கிளினிக் வைத்திருந்த நான்
 3. இப்பொழுது (Dec 2006- Upto now) Mediquick, 48/1,Dharmarama Road, Colombo 06 ல் எனது நோயாளர்களைப் பார்வையிடுகிறேன். தொ.பேசி 0112507514.

எழுதிய நூல்கள்
1. சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர்
2. பாலியல் நோய்கள்
3. போதையைத் தவிருங்கள்
4. தாயாகப் போகும் உங்களுக்கு- இலங்கையில் 1 பதிப்பு,  NCBH சென்னை 3 பதிப்புகள்
5. எயிட்ஸ்- இலங்கையில் 3 பதிப்புகள், NCBH சென்னை 3 பதிப்புகள்
6. வைத்திய கலசம்
7. சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு
8. நீங்கள் நலமாக- இலங்கையில் 5 பதிப்புகள்
9. நீரிழிவுடன் நலமே வாழுங்கள்
10. டொக்டரின் டயறியிலிருந்து- மல்லிகைப் பந்தல் வெளியீடு
11. மறந்து போகாத சில

12. கொலஸ்டரோல் கட்டுப்படுத்துவது எப்படி?
13. உயர் இரத்தநோயைப் புரிந்கொள்ளல்

இவற்றில் ‘மறந்து போகாத சில’, ‘டொக்டரின் டயறியிலிருந்து’ ஆகிய இரண்டும் தவிர்ந்த ஏனையவை நலவியல் நூல்களாகும்.

விருதுகள்

 • ‘தாயாகப் போகும் உங்களுக்கு’, ‘நீங்கள் நலமாக’ ஆகிய இரண்டும் இலங்கை தேசிய சாஹித்திய விருதுகளைப் பெற்றன.
 • ‘தாயாகப் போகும் உங்களுக்கு’ இலங்கை இலக்கியப் பேரவை விருதையும் பெற்றது.
 • இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் ஊடகத்துறை பங்களிப்பிற்கான விருது
 • சிறந்த வலைப் பதிவாளர் விருது :- கொழும்பு பல்கலைக் கழக தமிழ்ச்சங்க விருது 2011

வெளிவர இன்னும் பல நூல்கள் காத்திருக்கின்றன.

இணையத்தில்

 1. பதிவுகள்- Pathivukal.com
 2. ஹாய் நலமா?:- http://hainallama.blogspot.com
 3. மறந்துபோகாத சில :- http://suvaithacinema.blogspot.com/
 4. Steth இன் குரல் :- http://stethinkural.blogspot.com
 5. மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய ப.மா.ஒன்றியம்:- http://msvoldpupilsforum.blogspot.com
 6. முருகானந்தன் கிளினிக்:- http://hainalama.wordpress.com/
 7. முருகானந்தன் கிளிக்குகள்:- https://muruganandanclics.wordpress.com/
 8. Twitter, Google +, Linkedin, Facebook, Flickr ஆகியவற்றில் உலா வருகிறேன்.

ஹாய் நலமா? :  நலவியல் கட்டுரைகளை மட்டும் உள்ளடக்குவது.

மறந்துபோகாத சில: என்பது கலை இலக்கியக் கட்டுகைள், கவிதை, சினிமா, விமர்சனம், புகைப்படம் எனப் பல்துறை விடயங்களைப் பகிர்வதற்கானது

முருகானந்தன் கிளினிக்: நலவியலுடன் ஏனைய படைப்புகளையும் கலந்து தருவது

Steth இன் குரல்: இது மருத்துவத்துறை சார்ந்த சுவார்ஸமான அனுபவங்களைப் பதிவது

முருகானந்தன் கிளிக்குகள்: பிரதானமாக புகைப்படங்களுக்கானது. அவை பற்றிய கவிதைகளையும் உள்ளடக்குவது

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய ப.மா.ஒன்றியம்:- இது எனது ஆரம்பப் பாடசாலை பற்றியது

பதிவுகள்:- இது கனடாவிலிருந்து வெளியாகும் இணைய சஞ்சிகை இதில் எனது கட்டுரைகள் இடம்பெறுவதுண்டு.SDC13183-002

4 responses »

 1. படிக்க பார்க்க எளிதாக எப்படி வோர்ட் பிரஸ் பக்கங்களை வடிவமைக்க உதவும் பக்கங்கள். வலை மனை போன்று கடினமில்லை என புரியவைக்கிறது. நன்றி.

 2. வணக்கம்!

  மருத்துவம் கற்றீா்! மணித்தமிழ் காக்கும்
  அருந்தவம் உற்றீா்! அமுத – விருந்தாக
  உம்மின் வலைகண்டேன்! உள்ளம் உவக்கின்றேன்!
  நம்மின் தமிழில் நனைந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
  20.11.2014

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s