கரையோடும் இரயில்
ஒரு பக்கம்
அலை வீசும் கடல்
மறுபக்கம்
காலாற நடைபோடும்
மாந்தர்
உவர் மணல் மீது
தரையெங்கும்
பசுமை போர்த்தும்
கொடியிடை அடம்பன்
தனிமைக்கு இடமேது ?
தஞ்சம் தருவாயா
தென்னங் கன்றே !!
சற்றே ஒளிந்து
காதல் பேச.
எம்.கே.முருகானந்தன்
Advertisements