Category Archives: காத்திருப்பு

காத்திருந்து கிளுக்கவில்லை

பதிவின் வடிவம்

காத்திருந்து கிளுக்கவில்லை
காலாறக் கடற்கரைக்கு
செல்ல முயன்றபோது

குறுக்கிட்டார்
முடியுமா என்னைப் பிடிக்கவென
மிடுக்குடன் கேட்டார்
பிடித்து அடக்கினேன்
செல்பேசி கமாராவுள்

20141130_082218_Richtone(HDR)-001

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Advertisements

காத்திருப்பு

பதிவின் வடிவம்

DSC01098-001

அலை தீண்ட மணல் ஒளிரும்
நெடுநீலக் கரைமுதல்
வான் நெருங்க வளர்ந்தோங்கும்
நகர்கோலம் அடங்குவரை
கொழும்பெங்கும் உலாவாக
படகுக் காத்திருப்பு

SDC14545-001

குடலெழுந்து நா கடந்து
சத்தி வெளியாகும்
கழிவோடை பெருநாற்றம்
பொறுத்தபடி
சிறகு மடித்து
காலூன்றிக்
காத்திருக்கும் கொக்கு

SDC14804-0011

காத்திருப்பு தொடர்ந்திருக்கும்
மலர்பெருகி
நீர் ஒழியும்  தாமரை தடாகங்களிலும்
பசும் ஆடை மேவிய குன்றுகளிலும்
பொசுத்தெரிக்கும் வெயிலிலும்
பனிசொரியும் கூதலிலும்
பொறுமையைப் பாடமாக
கற்றுத் தந்தபடி

SDC13841-001

எம்.கே.முருகானந்தன்

0.00.0

காத்திருப்பு இலைமீதும் இவருக்காகவும்

பதிவின் வடிவம்

காத்திருந்தேன் தெருவோரம்
வருமா வாகனமென?
வரவில்லை.
வந்தார் ஒருவர்
மெதுவென அமர்ந்தார்.
அமைதியின்றி அலைந்தார்
அங்கும் இங்கும்

ஆயினும்
கரமிருந்த பை திறந்து
கமராவைக் கைப்பிடித்து
கிளிக்கும் வரை
பறந்தோடவில்லை.
காத்திருந்தார்
அருகிருந்த தளிரிலையில்
இரை வருமாவென
ஏக்கத்துடன்.
கமராவிற்குள்
சிறையானார்
பாக்கியவானானேன்.
எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0